தூய்மை கல்வி நிறுவனங்கள் தமிழகத்துக்கு மூன்று விருதுகள் - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Wednesday, December 4, 2019

தூய்மை கல்வி நிறுவனங்கள் தமிழகத்துக்கு மூன்று விருதுகள்

தூய்மை கல்வி நிறுவனங்கள் தமிழகத்துக்கு மூன்று விருதுகள் 

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடத்திய, தூய்மையான கல்வி நிறுவனங்களுக்கான போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த மூன்று கல்வி நிறுவனங்களுக்கு விருது வழங்கப்பட்டது. தூய்மை கல்வி நிறுவனங்களுக்கு விருது வழங்கும் விழா, டில்லியில் நேற்று நடந்தது. 

இதில், இந்தாண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. பல்வேறு பிரிவுகளில், கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் சிறப்பிடம் பிடித்த கல்வி நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.நாடு முழுவதும் உள்ள, 7,000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இதில் தரம் பிரிக்கப்பட்டன. அதில், 52 கல்வி நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 

ADQPU7461G
ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்ற பல்கலைகளில், சென்னை எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்துக்கு விருது வழங்கப்பட்டது.கல்லூரிகள் பிரிவில் கோவையைச் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு விருது வழங்கப்பட்டது. ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பனிமலர் பொறியியல் கல்லூரிக்கு விருது வழங்கப்பட்டது.'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பேசியதாவது:

மாணவர் அனைவரும் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம், ஒரு லிட்டர் தண்ணீரை சேமிப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அதை அவர்கள் கடைபிடிப்பதுடன், தன்னை சுற்றியுள்ளவர்களையும் உறுதி எடுத்துக் கொள்ள வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.மத்திய மனித வள மேம்பாட்டு துறைச் செயலர் ஆர். சுப்பிரமணியம் பேசியதாவது:புதிய தேசிய கல்விக் கொள்கை இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. விரைவில் இது, மக்களின் பார்வைக்காக இணையதளத்தில் வெளியிடப்படும். இந்தக் கல்விக் கொள்கை, உலக அளவில் சிறந்த கல்வி அளிக்கும் நாடாக இந்தியாவை உருவாக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

Please Comment