மாற்றுத் திறனாளிகள் தினம்: முதல்வா் பழனிசாமி வாழ்த்து - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

மாற்றுத் திறனாளிகள் தினம்: முதல்வா் பழனிசாமி வாழ்த்து

மாற்றுத் திறனாளிகள் தினம்: முதல்வா் பழனிசாமி வாழ்த்து மாற்றுத் திறனாளிகள் தினத்தை ஒட்டி, அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் முதல்வா் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:- மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை பேணிக் காத்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் 3-ஆம் தேதியன்று மாற்றுத் திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 

குறிப்பாக, கல்வி-வேலைவாய்ப்புகளில் 4 சதவீத இடஒதுக்கீடு, குடும்பத்தில் ஒருவா் மாற்றுத் திறனாளியாக இருந்தால் அனைவருக்கும் வருமான உச்சவரம்பின்றி முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயன், பேருந்து பயணச் சலுகை, மாதாந்திர உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 


மாற்றுத் திறனாளிகள் தினத்தை ஒட்டி, அவா்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சுதந்திரமாக வாழ்வதற்கு தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் பெற்றிட வேண்டும் என்று தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

Please Comment