சுடுநீர் குடிங்க… சுகமா இருங்க! - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...

♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Tuesday, December 3, 2019

சுடுநீர் குடிங்க… சுகமா இருங்க!

👍Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
👍Whats📱Trending🌍Today?👉Click Here
👍Health📱Tips🌍For You👉Click Here

சுடுநீர் குடிங்க… சுகமா இருங்க!

நாம் அடிக்கடி நீர் குடிப்பது நம் உடல் நலத்திற்கு நல்லது. நிறையத் தண்ணீர் குடிப்பது மேலும் நல்லது. அதைவிட, சுடுநீரைக் குடிப்பதால் இன்னும் பலப்பல நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? வெயில் காலம், குளிர் காலம் என்றெல்லாம் பார்க்க வேண்டாம். தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் சுடுநீரைக் குடித்து வந்தால், நம் உடலில் நிறைய மாற்றங்களைக் காண முடியும். சளி, மூக்கடைப்பு தொண்டைக்கட்டு சரியாக… 

 குளிர் காலத்தில் இயல்பாகவே நம்மில் பெரும்பாலானோருக்கு எளிதில் சளி பிடிக்கும்; மூக்கு அடைத்துக் கொள்ளும்; தொண்டையும் கட்டிக் கொள்ளும். அப்போதெல்லாம் சுடுநீரைக் குடித்தால் அந்தப் பிரச்சனைகள் உடனே அகலும்.

முடி நன்றாக வளர… 

 சுடுநீரை அடிக்கடி குடித்து வந்தால், முடிகளின் வேர்கள் சுறுசுறுப்பாகி, முடிகள் மேலும் வளர வழி வகுக்கும். பருக்கள் நீங்க… எண்ணெய்-தூசி காரணமாகவே பருக்கள் உருவாகின்றன. 

டீன் ஏஜ் பெண்களையும், ஏன், சில ஆண்களையும் கூட பருக்கள் படாதபாடு படுத்தும். இந்தப் பருக்களை விரட்ட, தொடர்ந்து சுடுநீரைக் குடித்து வந்தால், பருக்கள் விலகும்; முகமும் ஜொலிக்கும். இரத்த ஓட்டம் சீராக… நம் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பது ஆரோக்கியத்திற்கு அவசியம். நாம் சுடுநீரை அடிக்கடி குடித்து வந்தாலே போதும், இரத்த ஓட்டம் சீராகும். நரம்பு மண்டலத்தின் ஓரத்தில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களும் இந்த சுடுநீரில் கரைந்து விடும்.

குடல் இயக்கம் அதிகரிக்க… 

 குடல் இயக்கமும் சரியாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். மிதமான சுடுநீரை தினமும் காலையில் காலி வயிற்றில் குடித்து வந்தால், மலச் சிக்கலும் நீர்ச்சத்து குறைவும் நீங்கி, குடல் இயக்கம் அதிகரிக்கும். 

 மாதவிடாய் பிரச்சனை குறைய… 

 மாதவிடாய் நாட்களில் பெண்கள் மிகவும் அவதிப்படுவார்கள். அந்தச் சமயங்களில் அடிக்கடி சூடான நீரைக் குடித்து வந்தால், மாதவிடாய் வலிகள் வெகுவாகக் குறையும்.உடல் எடை குறைய… குண்டாக இருப்பவர்களின் உடலில் தேவையில்லாமல் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் குறைத்தாலே எடை குறைந்துவிடும். அதற்கு, தினமும் காலையில் மிதமான சுடுநீரைக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கொழுப்புக்கள் சரசரவென்று குறைந்து, எடையும் குறையும். 

ஒரு சொட்டு எலுமிச்சை சாற்றையும் சுடுநீருடன் சேர்த்துக் கொண்டால் அது உடம்பில் மேலும் கொழுப்பு சேர விடாமல் தடுக்கும். 

 நச்சுக்கள் அகல… 

 சுடுநீர் குடிக்கும்போது, நம் உடல் வெப்பநிலை உயர்ந்து, உடனடியாக அது வியர்வையாக வெளியேறுகிறது. இதனால், நச்சுக்கள் அனைத்தும் உடம்பிலிருந்து வெளியேறுகின்றன. சுடுநீருடன் கொஞ்சம் எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்துக் கொண்டால் அதிக பலன் தெரியும். மெதுவாகவே வயதாக… இந்தக் காலத்திலெல்லாம் சிலருக்கு வேகமாகவே வயதாகி விடும். உடலிலும் தோலிலும் அனாவசியமாக இருக்கும் நச்சுப் பொருட்கள்தான் இதற்குக் காரணம். சுடுநீர் குடிப்பதால் அத்தகைய நச்சுப் பொருட்கள் விரைவாகவே வெளியேறிவிடும். இதனால் நமக்கு வேகமாக வயதாகாது.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .