இன்றைய கல்வி செய்திகள் 04/12/19 (1) - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...

♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Wednesday, December 4, 2019

இன்றைய கல்வி செய்திகள் 04/12/19 (1)

👍Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
👍Whats📱Trending🌍Today?👉Click Here
👍Health📱Tips🌍For You👉Click Here

இன்றைய செய்திகள்
4.12.19(புதன்கிழமை)


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
⛑⛑தமிழகத்திற்கு புதிதாக அறிவிக்கப்பட்ட 6 மருத்துவ கல்லூரிகளுக்கு முதற்கட்டமாக ரூ.137.16 கோடி ஒதுக்கியது மத்திய அரசு.
திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகரில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைய உள்ளன.
⛑⛑தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் வரும் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
⛑⛑எதிர்வரும் ஆண்டு வரைவுத்திட்டம் 2020 - 2021 ல் தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011-ன் படி,  புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்குதல் மற்றும் தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துதல் சார்பான கருத்துருக்கள் GIS வரைபடத்துடன் 05.12.2019-க்குள் அனுப்புமாறு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தால் கோரப்பட்டுள்ளது 
⛑⛑நம்முடைய பாடத்திட்டத்தில் தியரி, பிராக்டிகல் கல்வி முறை ஆகிய இரண்டும் இணைந்தால் தமிழகம் கல்வியில் முதலிடம் பெறும் என்று பின்லாந்து கல்விக் குழு தெரிவித்துள்ளது.
⛑⛑டெல்லி உயா்நீதி மன்ற மேனாள் தலைமை நீதியரசரும், தேசிய மனித உரிமை ஆணைய மேனாள் உறுப்பினருமான மரியாதைக்குரிய திருமிகு. D.முருகேசன் அய்யா அவர்களை, மாண்பமை உச்சநீதிமன்ற அமர்வானது, தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களின் "சம்பள குறைதீர்க்கும் குழு" வின் (Pay Grievances Redressal Committee _PGRC) தலைவராக நியமித்துள்ளது.
⛑⛑2018 -2019 வரையிலான CPS ACCOUNT STATEMENT வந்துள்ளது. பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக்கொள்ளவும்.
⛑⛑3 லட்சம் கோடி ரூபாய் ஓய்வூதிய நிதியினைக் கையாளும் PFRDA வின் இணையதளம் முடக்கம்.
⛑⛑உத்திரப்பிரதேசத்தில் தனது செருப்பை சரிசெய்ய மாணவர்களை அனுப்பிய ஆசிரியர்! பணியிடை நீக்கம் செய்து உத்தரவு
⛑⛑உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு இன்று பல்வேறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்   பயிற்சி நடத்த உள்ளனர்.
⛑⛑இணையதளம் அமெரிக்காவின் பிடியில், ஆபாச காட்சிகள் இந்தியர்களின் கையில் .....  அமெரிக்க புலனாய்வு நிறுவனம்(FBI), இந்திய உள் துறை அமைச்சகத்துக்கு எச்சரிக்கை
⛑⛑மழையால் பாதித்த மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும் : கோபியில் செங்கோட்டையன் தகவல்
⛑⛑தமிழக உள்ளாட்சி தேர்தல் பணிகளில் மாற்றுத்திறனாளிகள் தேர்தல் பணிகளில் விலக்களிக்க கோரிக்கை
⛑⛑அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில்   ஆண்டு வருமானம் ரூ 2.50 லட்சத்திற்கு குறைவாக உள்ள சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்கள் பயன் பெற அரசாணை வெளியிடு.
இத்திட்டத்தில் வயது வரம்பு 45 ஆக அதிகரிப்பு.
⛑⛑தமிழகம் முழுவதும் ஓய்வூதியம் பெறும் 10,000 பேரின் ஓய்வூதியத்தில், ஓய்வூதிய தொகுப்பு பணப்பலன் நிறுத்தம்  -பாதிக்கப்பட்டோர் கண்ணீர் 
⛑⛑தனியார் பல்கலைக் கழகங்களின் கட்டணத்தை முறைப்படுத்துதலுக்கு எதிர்ப்பு
⛑⛑பெட்ரோல்-டீசல் மீதான வரிகளைக் குறைக்கும் திட்டமில்லை-மத்திய நிதியமைச்சர்
⛑⛑ஐதராபாத் மற்றும் கோவை பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து பெண்கள் அமைப்பினர் நாடெங்கும் போராட்டம். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை தர வேண்டுமென நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் கொந்தளிப்பு.
⛑⛑சந்திரயான் 2 விண்கலம் சுமந்து சென்ற விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து விட்டதாக நாசா தெரிவித்துள்ளது.
⛑⛑சீனாவில் உள்ள மக்கள் புது மொபைல் இணைப்பைப் பெறுவதற்கு ஃபேசியல் ரெகெக்னிஷனை கட்டாயமாக்கியுள்ளது அந்நாட்டு அரசு. இந்த மாதம் முதல் இந்தப் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
ADQPU7461G ⛑⛑ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நாடு முழுவதும் அமல்
⛑⛑தமிழகத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்று நட்டு, பராமரிக்க உரிய உத்தரவு  பிறப்பிக்க கோரிய மனு மீதான விசாரணை.
மத்திய, மாநில நெடுஞ்சாலைத்துறை செயலர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
⛑⛑தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக ஐபிஎஸ் அதிகாரி அன்பு நியமனம்
பணி நியமன உத்தரவை பிறப்பித்தார், முதன்மை செயலாளர் பிரபாகர்
பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்பு நிறைவடைந்த நிலையில் அன்பு நியமனம்
⛑⛑⛑⛑⛑⛑⛑⛑
🌹🌹அரையாண்டு விடுமுறையில் தேர்தல்: அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி:-

👉அரையாண்டு விடுமுறையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல், டிச., 27, 30 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில், அரசுப்பள்ளி ஆசிரியர்களில், 90 சதவீதம் பேர் பயன்படுத்தப்படுவது வழக்கம். அரசுப்பள்ளிகளுக்கு, டிச., 24 லிருந்து, ஜன., 2 வரை அரையாண்டு தேர்வு விடுமுறை விடுவது வழக்கம். விடுமுறை நாட்களில் வெளியூர் செல்வது உள்ளிட்ட பணிகளுக்கு, ஆசிரியர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு வந்தனர். இந்நிலையில், அரையாண்டு விடுமுறையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் பணிக்காக முன்தினமே ஓட்டுச்சாவடிக்கு செல்லுதல், பயிற்சி, பணிக்கான ஆணை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் காத்திருக்கின்றன. இதனால், அரையாண்டு விடுமுறையை அனுபவிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
⛑⛑⛑⛑⛑⛑⛑⛑
🌹🌹இதனை செய்தால் கல்வியில் தமிழகம் முதலிடம் பெறும்: தமிழகம் வந்த பின்லாந்து கல்விக் குழு அறிவிப்பு

ADQPU7461G
🌹👉நம்முடைய பாடத்திட்டத்தில் தியரி, பிராக்டிகல் கல்வி முறை ஆகிய இரண்டும் இணைந்தால் தமிழகம் கல்வியில் முதலிடம் பெறும் என்று பின்லாந்து கல்விக் குழு தெரிவித்துள்ளது.
👉தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் அமைச்சர் செங்கோட்டையன், செயலாளர் பிரதீப் யாதவ் ஆகியோர் சமீபத்தில் பின்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கல்வி முறை குறித்துக் கேட்டறிந்தனர். இதைத்தொடர்ந்து 6 பேர் அடங்கிய பின்லாந்து நாட்டு கல்விக் குழு இரு வாரப் பயணமாக தமிழகம் வந்தது.
👉தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளை பார்வை யிட்டு ஆசிரியர்கள் கற்பிக்கும் வழிமுறை, மாணவர்களின் கற்றல் திறன் தொடர்பாக ஆய்வு நடத்தியது. அதன்பின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 150 ஆசிரியர்களுக்கு பின்லாந்து கல்விக் குழு, கற்பித்தல் முறை குறித்துப் பயிற்சி அளித்தது.
👉அதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பின்லாந்து குழுவினர் சென்றனர். வகுப்பறைக்கு நேரில் சென்ற அவர்கள் மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தல் முறையை அறிந்து கொண்டனர். பின்னர் மாணவர்களுடனும் கலந்துரையாடினர். தொடர்ந்து கற்பித்தல் பணிகள் இடையே மாணவர்களுடன் அவ்வப்போது உரையாடிக்கொண்டே இருக்க வேண்டும் என பின்லாந்து கல்விக் குழு ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கியது.
👉இதுகுறித்துத் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ள பயோ அகாடமியின் தலைமைச் செயல் அதிகாரி லீசா டோய்வானின், ''தமிழக மாணவர்கள் திறமை வாய்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள் அனைவரும் கற்பதில் ஆர்வமாக இருக்கின்றனர். கல்வித் தரத்தை அரசு அதிகரிக்கும் பட்சத்தில் மாணவர்கள் தாமாகச் சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்வர்'' என்றார்.
👉பின்லாந்து ஆசிரியர் ஒருவர் கூறும்போது, ''தமிழகத்தில் தியரி முறை சிறப்பாகக் கையாளப்படுகிறது. பின்லாந்து நாட்டில் பிரபலமான பிராக்டிகல் முறையைத் தமிழகத்தில் அமல்படுத்தலாம். இதன்மூலம் தமிழக பள்ளிக்கல்வியின் தரம் மேம்படும்; முதலிடம் பெறும்'' என்று தெரிவித்துள்ளார்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .