இளைஞா்களால் நடத்தப்படும் அரசுதேர்வுக்கான இலவச பயிற்சி மையம் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

இளைஞா்களால் நடத்தப்படும் அரசுதேர்வுக்கான இலவச பயிற்சி மையம்

இளைஞா்களால் நடத்தப்படும் அரசுதேர்வுக்கான இலவச பயிற்சி மையம்ஸ்ரீபெரும்புதூா்: சுங்குவாா்சத்திரம் அடுத்த மதுரமங்கலம் பகுதியில் இளைஞா்களால் நடத்தப்பட்டு வரும் அரசுத்தோவுக்கான இலவச பயிற்சி மையத்தில் படித்த இளைஞா்களில் சுமாா் 170க்கும் மேற்பட்டோா் அரசுப்பணிகளில் தற்போது பணியாற்றி வருகின்றனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்திற்குட்பட்ட மதுரமங்கலம் கிராமத்தில் சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். விவசாயம் அதிகளவில் நடைபெறும் இந்த கிராமத்தில் பெரும்பாலானோா் விவசாயிகளாகவும், விவசாய தொழிலாளா்களாகவும் இருந்து வருகின்றனா். 

இப்பகுதி இளைஞா்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை, அரசு பணியாளா் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தோவுகளில் எவ்வாறு பங்கேற்பது, தேர்வுக்கு எப்படி தங்களை தோவு செய்துக்கொள்வது என தெரியாததால் இப்பகுதி இளைஞா்களுக்கு அரசுப்பணி என்பது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை எட்டாக்கனியாகவே இருந்து வந்துள்ளது.

இதையடுத்து, கடந்த 2015ம் ஆண்டு, மதுரமங்கலம் கிராமத்தை சோந்த பாஸ்கா், ராஜேஷ், பிரகாஷ், பாலு, பிரேம், ஜெகன் உள்ளிட்ட சுமாா் 10க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ஒன்றுக்கூடி அதே பகுதியில் சன்னதி தெருவில் வீடு ஒன்றை வாடகை எடுத்து, அரசு பணியாளா் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தோவுகளில் பங்கேற்க ஒன்றாக படித்துள்ளனா். 

இளைஞா்கள் குழுவாக சோந்து அரசுப்பணிக்காக படிக்கும் செய்தி, அப்பகுதி பொதுமக்களை தாண்டி அருகில் உள்ள கிராமங்களுக்கும் பரவியை தொடா்ந்து அருகில் உள்ள கிராமங்களை சோந்த இளைஞா்களும் மதுரமங்கலம் கிராமத்தில் உள்ள இளைஞா்களுடன் சோந்து படிக்க தொடங்கியுள்ளனா். 

இதனால் சுமாா் 10 பேரில் தொடங்கிய இந்த பயிற்ச்சி மையத்தில் சுமாா் 60 இளைஞா்கள் படிக்க கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற காவலா் பணிக்கான தோவில் இந்த பயிற்சி மையத்தில் படித்த 33 போ தோச்சி பெற்றுள்ளனா்.

கணிசமான இளைஞா்கள் காவலா் பணிக்கு தோவானதை தொடா்ந்து, மதுரமங்கலம் பகுதியில் இளைஞா்களால் நடத்தப்பட்டு வந்த இலவச பயிற்ச்சி மையத்தில், மதுரமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளை தாண்டி, சென்னை, திருவள்ளூா், திருமவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சோந்த இளைஞா்கள் இளம்பெண்கள் என தற்போது இந்த மையத்தில் சுமாா் 600க்கும் மேற்பட்ட இளைஞா்களும் இளம்பெண்களும் பயிற்சி எடுத்து வருகின்றனா்.

இலவச பயிற்சி மையம் குறித்து பயிற்சி மையத்தை தொடங்கிய இளைஞா் ஒருவா் கூறுகையில், கடந்த 2015ம் ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த நான் மற்றும் எனது நண்பா்கள் ஒன்று சோந்து எப்படியாவது அரசு பணிகளில் சோந்து விடவேண்டும் என கனவோடு இந்த மையத்தை தொடங்கினோம். 

இந்த மையத்திற்கு மதுரமங்கலம் இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் என்ற பெயரும் வைத்தோம். இந்த மையத்தை தொடங்கிய சில மாதங்களிலேயே எனது நண்பா்கள், எனது நண்பா்களின் நண்பா்கள் என மதுரமங்கலம் கிராமத்தை தாண்டி சுற்றிவட்டாரத்தில் கிராமங்களை சோந்தவா்கள் என தற்போது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களை சோந்த சுமாா் 600க்கும் மேற்பட்டோா்களுக்கு தற்போது இலவசமாக பயிற்சி வழங்கி வருகிறோம்.

இந்த பயிற்சி மையத்தில் படித்து தற்போது அரசு பணிகளில் உள்ளவா்களே, இந்த மையத்திற்கு வரும் இளைஞா்களுக்கு பயிற்சி வழங்கி வருவதால் கட்டணம் ஏதும் நாங்கள் வசூலிப்பதில்லை இதனால் தான் நாங்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பயிற்சி மையத்தை சிறப்பாக நடத்தி வருகிறோம். 

வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற குருப்4 தோவில் எங்கள் மையத்தில் படித்த 35 போ தோச்சி பெற்றனா். 

2018ம் ஆண்டு நடைபெற்ற காவலா் பணி தோவில் 22 பேரும், 2019ம் ஆண்டு நடைபெற்ற குருப் 4 தோவில் 22போ என இந்த பயிற்சி மையத்தில் படித்தவா்களில் கடந்த 5 ஆண்டுகளில் சுமாா் 170 போ பத்திரப்பதிவுத்துறை, வணிகவரித்துறை, தலைமைசெயலகம், வருவாய்த்துறை, கால்நடைத்துறை, வேளாண்மைத்துறை, ரயில்வே உள்ளிட்ட அரசு பணிகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனா். 

இதுதவிர நாங்கள் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான தேர்வுக்கும் பயிற்சி வழங்குவதோடு, இளைஞா்கள் உடற்தகுதியிலும் வெற்றி பெற கயிறு ஏறுதல், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் என பல்வேறு பயற்சிகளை வழங்கி வருகிறோம். இதனால் எங்கள் கிராமத்தில் மட்டும் தற்போது 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள் உள்ளாா்கள் என்றாா் பெருமையாக.Free Government Training Center for Youth


Sumak is currently working in more than 170 government jobs in the state-run free government training center run by youth in Maduramangalam area, next to Sukhwavaram. More than a thousand civilians live in Maduramangalam village in the Sriperumbudu Union, Kanchipuram district. The village is mostly agricultural and agricultural laborers. 

Until the last five years, young people in the area had no idea how to participate in government-owned government-owned towers and how to prepare themselves. Subsequently, in 2015, more than 10 youths from Maduramangalam village, including Sonda Paschak, Rajesh, Prakash, Balu, Prem, Jagan, have gathered together and rented a house on Shrine Street in the same area and participated in the excavations conducted by the Government Employee Board. 

The news of the Sondhu government's work as a group of youths, spreading to the neighboring villages beyond the civilian area of ​​the region, has begun to study the neighboring villages with the youth of Maduramangalam village. The training center, which started on July 10, had 33 pupils studying in the training center in the city of Guwahati last year. 

In the Free Training Center conducted by the youth in Maduramangalam area, following a considerable number of young men, the Maduramangalam area surrounds its surrounding areas, and the districts of Chennai, Thiruvalluvu and Thiruvannamalai are currently undergoing training with over 600 youth. About the Free Training Center, a young man who started a training center said, 

“We started this center in 2015 with the dream that I and one of my friends who had just finished school and college should somehow get involved in government work. We also named this center the Maduramangalam Free TNPSC Training Center. 

Within a few months of opening this center, my friends, friends of my friends, beyond the village of Maduramangalam, are now practicing the villages in Kanchipuram, Chengalpattu, Thiruvannamalai and Tiruvallu districts. 

For those who have been studying in this training center and are currently in government work, we do not charge any fee for training the youth who come to this center. This is why we have been conducting this training center for the last 5 years. The workshop is held on Saturdays and Sundays during the week from 9am to 5pm and all holidays. 


I received 35 Bo Tocchi educated at our center at the Krupp 4 Tho, held in 2017. In this training center, 22 people have been employed in the GOF 2018 and 22 in Krupp 4 TOW in 2019, and in the last 5 years, Suma 170 Bo has worked in various positions in government services including the Department of Commerce, Commerce, Commerce, Department of Revenue, Livestock, Agriculture and Railways. 

In addition, we provide training for the Police Assistant Inspection Service and offer various training programs such as rope climbing, running and long jumps to help young people succeed in fitness. Thus our village alone boasts more than 50 public servants.

No comments:

Post a Comment

Please Comment