பல்கலை தேர்வு ஒத்திவைப்பு - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Sunday, December 1, 2019

பல்கலை தேர்வு ஒத்திவைப்பு

*🆎 நேரலை செய்திகள்*


*🆎 live சென்னை பல்கலை.யின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைப்பு*

*🆎தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு*

*🆎நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு*

*🆎அண்ணா பல்கலை.யின் கீழ் செயல்படும் கல்லூரிகள், 4 வளாகங்களின் தேர்வு ஒத்திவைப்பு**🆎தேர்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் என பதிவாளர் கருணாமூர்த்தி அறிவிப்பு*
*🔖♨நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலை தேர்வுகள் குறித்த அறிவிப்பு*

சென்னையில் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் சீதாலட்சுமி அவர்கள் சற்று முன் அறிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் கனமழை காரணமாக நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பாண்டியன் அவர்கள் சற்று முன்னர் அறிவித்துள்ளார்

இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் அசெளகரித்தை முன்னிட்டே இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது

ஏற்கனவே மின்சாரத்துறை நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற திட்டமிட்டிருந்த கேங்மேன் நேர்முகத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.


*__________________________________*
  
.        *【♨】⚘ thulirkalvi ⚘*

No comments:

Post a Comment

Please Comment