சர்வதேச பயணம் செல்வோர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

சர்வதேச பயணம் செல்வோர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை

சர்வதேச பயணம் செல்வோர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவைநீங்கள் வெகுதூரம் பயணிக்கும்போது, முழுமையாக அறிந்தவராக இருக்கவேண்டும். முதல் சர்வதேச பயண அனுபவம் என்பது எப்போதுமே ஒரு சிறப்பான அனுபவமாகும். அது ஒருமுறை மட்டுமே நிகழும். இதனால் ஒருவித பதட்ட உணர்வு இருக்கும். ஆனால், நிறையவே ஆர்வமும் இருக்கும். 

பல மாதங்களுக்கு முன்பே பயணத்துக்காகத் திட்டமிடுங்கள். ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள். அதில் புதிய விஷயங்களைப் பட்டியலிடுங்கள், பொருந்தாதவற்றை நீக்குங்கள். பயணத்திட்டங்களை தயாரியுங்கள். அதனை விரிவாகப் படியுங்கள். ஆனால், சில நேரங்களில் சில விஷயங்கள் நம் மனதில் இருந்து அறியாமல் நழுவிடும். 

அது கொஞ்சம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். புத்தாண்டு இன்னும் சில நாட்களில் பிறக்க உள்ள நிலையில் பல்வேறு சர்வதேச பயணங்கள் நம்மை இழுக்கும். உங்களிடம் சில நாட்களே கால அவகாசம் இருக்கும் நிலையில், சில முக்கியமான ஆலோசனைகள் உங்களுக்கு உதவக்கூடும். படியுங்கள்.

உங்கள் பாஸ்போர்ட்டை முன்கூட்டியே பெறுங்கள் வெளிநாட்டுக்கு ஒரு பயணம் செய்யத்திட்டமிடும்போதுதான், சிலருக்கு பாஸ்போர்ட் குறித்த விழிப்புணர்வே வரும். இது போன்ற தவறை நீங்கள் செய்யாதீர்கள். உங்களிடம் இல்லையெனில் சிலமாதங்களுக்கு முன்பாகவே, ஒரு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்யுங்கள். 

பயணத்துக்கு தேவையான விசா உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் உங்கள் பாஸ்போர்ட்டை சாந்ததாகவே இருக்கின்றன. நீங்கள் வெளிநாடு ஒன்றில் பயணிக்கும்போது, நீங்கள் அதனை பத்திரமாக வைத்திக்க மறந்து விடாதீர்கள். நீங்கள் அதனை தொலைத்து விட்டால், அதற்காக பீதியடைய வேண்டாம். முதலில் போலீஸில் புகார் தெரிவிக்கவும். 

பின்னர் தூதர கத்துக்குச் சென்று தற்காலிக பாஸ்போர்ட்டை பெறலாம். நாட்டைப் பற்றி படியுங்கள் ஒரு நாட்டைப்பற்றிய தகவல்களை படித்துத் தெரிந்து கொள்ளாமல், அந்த நாட்டுக்கு செல்ல வேண்டாம். ஒரு மரியாதக்குரிய சுற்றுலாவாசியாக, நீங்கள் செல்லும் நாட்டின் விதிமுறைகள், வழிமுறைகள், கலாசாரம் ஆகியவற்றை புரிந்து கொள்வது நல்லது. 

சில நாடுகளில் நீங்கள் தவறாக ஏதும் செய்து விட்டால், அந்த நாட்டின் கடுமையான சட்டங்களின் கீழ் நீங்கள் தண்டிக்கப்படலாம். இதுபோன்ற எதிர்பாராத நிகழ்வுகளைத் தவிர்க்கவும். ஓரிரண்டு வார்த்தைகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.

நீங்கள் செல்லும் நாடுகளில் உள்ள உள்ளூர் மக்களிடம் நீங்கள் உரையாட விரும்பினால், அந்த நாட்டின் மொழி உங்களுக்குத் தடையாக இருக்கலாம். எனவே அந்த நாட்டின் உள்ளூர் மொழியின் சில சொற்களை கற்றுக் கொள்ளுங்கள். முழுமையாக மொழியைப் புரிந்து கொள்வது போல இருக்காதுதான் எனினும், இது இன்னும் உதவியாக இருக்கும். 

ஒரு பட்டியல் தயாரித்துக் கொள்ளுங்கள் உங்கள் பயணத்துக்குத் தேவைப்படும் அத்தனை ஆவணங்கள் குறித்தும் ஒரு பட்டியல் தயாரித்துக் கொள்ளுங்கள். அந்த ஆவணங்கள் அனைத்திலும் ஒரு நகல் வைத்துக் கொள்ளுங்கள். விசாவாக இருந்தால், அதன் நகலை எடுத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். 

ஹோட்டல் அறை முன்பதிவுகள், விமான டிக்கெட்கள், சொந்த அடையாள அட்டைகள் உள்ளிட்டவற்றை நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பிரதி காணாமல் போய்விட்டாலும் கூட, இன்னொன்று உங்களிடம் இருக்கும். பயணக்காப்பீடு பெறுங்கள் மிகவும் முக்கியமான இந்த ஒன்றை, பெரும்பாலான மக்கள் தவற விட்டுவிடுவார்கள். 

இது ஒரு தேவைக்கு அதிகமான ஒன்று போல தோன்றலாம். ஆனால், எங்களை நம்புங்கள். நீங்கள் சிக்கலில் மாட்டும்போது இது உங்களுக்கு உதவும். நீங்கள் சர்வதேச நாடுகளில் பயணிக்கும்போது எதிர்பாராமல் என்ன நிகழும் என்பது உங்களுக்கு ஒருபோதும் தெரியாது. 

நீங்கள் உங்களை காப்பீடு செய்து கொள்ளும்போது, உங்கள் பணம், உங்களையும் உங்கள் சொந்தப் பொருட்களையும் பாதுகாத்துக் கொள்கிறீர்கள். நாணயப்பரிமாற்றம் பெரும்பாலும், வெளிநாட்டு நாணயப்பரிமாற்றத்துக்கு விமானநிலையங்கள் ஏற்றதாக இருக்காது என்று நம்ப ப்படுகிறது. 

உங்கள் பணத்தை எங்கே பரிமாற்றம் செய்தால் நல்லது என்பதை முன்கூட்டியே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். ஆனால், பணமற்ற சேவைகளை மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்துதல் என்பது பரிந்துரைக்கப்படுகிறது.


What international travelers should keep in mind when you travel, be fully aware. 


The first international travel experience is always a great experience. It will only happen once. There will be some sort of tension. But there will be plenty of interest. Plan a trip several months in advance. Prepare a list. List new things in it and delete things that don't fit. Prepare travel plans. Read it in detail. But, sometimes things slip out of our minds unknowingly. It can be a little stressful. 

The New Year will bring us a variety of international journeys, with a few days to spare. If you have a few days off, some important advice may help you. Read. Get your passport in advance When planning a trip overseas, some people will become aware of the passport. Make no mistake like this. If you do not have a few months beforehand, apply for a passport. 

All things, including a visa for travel, are tucked away in your passport. When you travel abroad, do not forget to keep it safe. If you miss it, don't panic. Report it to the police first. Then you can go to the Embassy and get a temporary passport. Read about the country Do not go to a country without reading about it. As a respected tourist, it is good to understand the country's rules, methods and culture. 

If you do something wrong in some countries, you may be punished under the strict laws of that country. Avoid such unexpected events. Learn two words. If you want to talk to the local people in the countries you go to, the language of that country can be a barrier for you. So learn a few words of the local language of that country. Although it may not be as thorough as understanding the language, it is still helpful. Make a List Make a list of all the documents you need for your trip. 

Keep a copy of all those documents. If it is a visa, take a copy of it and secure it. Keep a copy of hotel room bookings, airline tickets and personal identity cards. Even if one copy goes missing, you will still have one. Get a travel ticket One of the most important things most people miss. This may seem like a much-needed one. But, trust us. This will help you when you are in trouble. 

You never know what will happen unexpectedly when you travel to international countries. When you insure yourself, you protect your money, your own, and your own. Exchange is often believed that airports are not suitable for foreign exchange. Read in advance where you can transfer your money. But it is recommended to use cashless services and travel cards.

No comments:

Post a Comment

Please Comment