தொடர் மழை எதிரொலி: மின்சார வாரியத்தின் கேங்மேன் நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Sunday, December 1, 2019

தொடர் மழை எதிரொலி: மின்சார வாரியத்தின் கேங்மேன் நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு

*🔖♨தொடர் மழை எதிரொலி: மின்சார வாரியத்தின் கேங்மேன் நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு*

சென்னை:மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையின் எதிரொலியாக, இருநாட்கள் நடைபெற இருந்த மின்சார வாரியத்தின் கேங்மேன் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 3 நாள்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தொடா் மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீா் தேங்கியது. ஒரு சில இடங்களில் குடியிருப்புகளிலும் மழை நீா் புகுந்தது. புறநகா் பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிய அளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இதுவரை புதுச்சேரி, கடலூர், தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு திங்களன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையின் எதிரொலியாக, இருநாட்கள் நடைபெற இருந்த மின்சார வாரியத்தின் கேங்மேன் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மின்சார வாரியம் ஞாயிறு மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தொடர் மழை காரணமாக திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களில் நடைபெற இருந்த கேங்மேன் நேர்முகத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக. தெரிவிக்கப்பட்டுள்ளது..


*__________________________________*
  
.        *【♨】⚘ wwwthulirkalvi.com ⚘*

No comments:

Post a Comment

Please Comment