மாற்றுத்திறனாளி மாணவர்கள் விமானத்தில் செல்ல ஏற்பாடு - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

மாற்றுத்திறனாளி மாணவர்கள் விமானத்தில் செல்ல ஏற்பாடு

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின கொண்டாட்டம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் விமானத்தில் செல்ல ஏற்பாடு சேலத்தில் இருந்து சென்னைக்கு அமைச்சருடன் பயணம் 

 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தைக் கொண்டாடும் வகை யில் அமைச்சர் சரோஜாவுடன் மாற்றுத்திறனாளி மாணவர்கள் விமானத்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிச.3-ம் தேதி கொண்டாடப் படுகிறது. 

இதையொட்டி மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டும் மாற்றுத்திறனாளிகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதன்படி, தாம்பரம் விமானப்படை தளத்துக்கு நாளை பிற்பகல் 12.30 மணியளவில் 75 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவி யர் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். அங்கு, விமானப்படை தளத்தின் செயல்பாடுகள் குறித்து மாணவ, மாணவியருக்கு எடுத் துரைக்கப்படும். 

 பிற்பகல் 3 மணியளவில் எழும்பூரில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரயிலில் 260 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் பயணம் மேற்கொள்கின்றனர். இதையடுத்து, ராயப்பேட்டை யில் உள்ள ஒரு திரையரங்கில் 3டி திரைப்படம் பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், வரும் 3-ம் தேதி, சமூகநலத் துறை அமைச்சர் சரோஜாவுடன் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் சேலத்தில் இருந்து சென்னை வரை விமானப் பயணம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 இதுதொடர்பாக, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 

 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத்திற னாளி மாணவ, மாணவியர் மெட்ரோ ரயில், விமானத்தில் பயணிப்பது, திரைப்படம் பார்ப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Please Comment