கல்விச் செய்திகள் 30•12•2019 - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Monday, December 30, 2019

கல்விச் செய்திகள் 30•12•2019

 கல்விச் செய்திகள் 2050 மார்கழி 14 ♝ &   30•12•2019🔥
🛡வாக்கு எண்ணும் பணி ஜனவரி -2 ஆம் தேதி நள்ளிரவு வரை நீடிக்க வாய்ப்புள்ளதால் 3-ஆம் தேதி பணிக்கு வருவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டுமென பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை..


🔥
🛡அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான துறைத்தேர்வு நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது ;  துறைத்தேர்வுக்கு  விண்ணப்பித்தவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

🔥
🛡 புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அரசு பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, தற்போது  அனுமதிக்கப்பட்டுள்ள விடுப்புகளுடன், கீமோ தெரபி, ரேடியோ தெரபி சிகிச்சை பெறும் ஒவ்வொரு முறையும், அவர்களுக்கு முழு ஊதியத்துடன் 10 பத்து நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கப்படும்

🔥
🛡வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ள அரசு  பள்ளிக்கு சூழ்நிலைக்கேற்ப 3-ஆம் தேதி விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் அரசுக்கு  வலியுறுத்தல் - நாளிதழ் செய்தி

🔥
🛡 EMIS வலைதளத்தில்  ஆதார் பதிவு செய்த , செய்யாத மாணவர்களின் விவரம் மாவட்டவாரியாக வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡கல்வித்துறையின் சுற்றறிக்கையினை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்துவது உறுதி செய்யப்பட்டால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

🔥
🛡பிஎச்டி மாணவர்களுக்கு புதிய பாடப்பிரிவு கட்டாயம் : ஆய்வுக் கட்டுரைகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முறைகேடுகளைத் தடுக்கவும் ‘ஆராய்ச்சிகள் &  வெளியீடுகளுக்கான நெறிமுறைகள்’ என்ற பாடத்தை கட்டாயமாக்க முடிவு.    "எம்.ஃபில் போன்ற ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் தங்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் இந்தப் பாடத்தை படிக்கலாம்".

🔥
🛡வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு வருகிற ஜனவரி 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

🔥
🛡தனியாா் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2018-19-ஆம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவா்களுக்கான கட்டணமாக ரூ.304 கோடி வழங்குமாறு அரசுக்கு பள்ளிக் கல்வித்துறை கடிதம்.


🔥
🛡விரைவில், 4,000 ஆசிரியர்கள் நியமனம்  மற்றும்  அரசுப் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவ - மாணவியருக்கு, வாரத்தில் ஒரு நாள், நடனம் மற்றும் பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என
 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

🔥
🛡2018 - 19 மற்றும் 2019 - 2020 - ம் ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகள் போக இருப்பிலுள்ள மடிக்கணினிகளின் எண்ணிக்கையை தெரிவிக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

No comments:

Post a Comment

Please Comment