கணினிக்குள் உலகம்... இன்று உலக கணினி கல்வி தினம்.! - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Monday, December 2, 2019

கணினிக்குள் உலகம்... இன்று உலக கணினி கல்வி தினம்.!

கணினிக்குள் உலகம்... இன்று உலக கணினி கல்வி தினம்.! 


உலக கணினி கல்வி தினம்: 


உலக கணினி கல்வி தினம் டிசம்பர் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கணிப்பொறியானது மிகக் குறைந்த நேரத்தில், வேலைகளை மிகச் சரியாக செய்து முடிக்கிறது.கணினி தற்போது வாழ்க்கையின் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. ஒரே இடத்தில் இருந்துகொண்டு மின்னஞ்சல் மூலம் உலகம் முழுவதும் தொடர்புகொள்ள முடிகிறது. ஆகவே அனைவருக்கும் கணினி கல்வி அவசியம் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது. 


 தேசிய மாசு கட்டுப்பாடு தினம்: 


 தேசிய மாசு கட்டுப்பாடு தினம் டிசம்பர் 2ஆம் தேதி இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது. போபால் நச்சுவாயு விபத்தில் மரணமடைந்தவர்களின் நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.தொழிற்சாலை பேரிடர்களைத் தடுப்பது, அவற்றை கையாளுவது பற்றிய விழிப்புணர்வை பரப்புவது மற்றும் மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கும், தொழிற்சாலை நிர்வாகத்திற்கும் ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். மேலும் இன்று உலக மாசு தடுப்பு தினமும் கடைபிடிக்கப்படுகிறது. 

 சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்


 சர்வதேச அடிமை முறை ஒழிப்பு தினம் ஐக்கிய நாடுகள் பொது சபையால் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2ஆம் தேதி கொண்டாடப்படும் தினம் ஆகும். இந்த தினம் முதன் முதலில் 1986ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமை முறையிலிருந்து காப்பாற்ற, தடுக்க மனித உரிமை ஆணையங்களைப் பலப்படுத்த வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.

No comments:

Post a Comment

Please Comment