அரசு பள்ளிகளில் கல்வியில் பின்தங்கிய மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

அரசு பள்ளிகளில் கல்வியில் பின்தங்கிய மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்

அரசு பள்ளிகளில் கல்வியில் பின்தங்கிய மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்விழுப்புரம், டிச. 30: விழுப்புரம் மாவட்ட அரசுபள்ளிகளில் கல்வியில் பின்தங்கிய மாணவர்களை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டுமென ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. 

ஆட்சியர் அண்ணாதுரை தலைமை தாங்கிபேசியதாவது, தலைமை ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்க வேண்டும். கல்வியில் பின்தங்கியவர்களை கண்டறிந்து ஊக்குவித்து மேன்மை படுத்த வேண்டும். 

ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் திறனை வளர்த்துகொள்ளவும், அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் அனைத்துபாட ஆசிரியர்களுக்கும் ஆய்வுக்கூட்டம் நடத்தி கற்றல், கற்பித்தல் பணியை விரைவுபடுத்திடவேண்டும். 

தலைமை ஆசிரியர்கள் தினந்தோறும் வகுப்பறைகளுக்கு சென்று ஒவ்வொரு பாட ஆசிரியர்களின் கற்பித்தல் பணிதொடர்பாக மாணவ, மாணவியர்களிடம் கருத்து கேட்டும், அவர்களின் புரிதல்திறனை ஆய்வு செய்ய வேண்டும். 

ஒவ்வொரு பாட ஆசிரியர்களும் தங்கள் பாடத்தினை முழுமையாக படித்து புரிந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு எளிதில் கற்கும் வகையில் எடுத்துக்காட்டு பொருளை கொண்டு செய்முறை விளக்கத்துடன் பாடம் நடத்திட தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தவேண்டும். 

தேர்வு நேரங்களில் மாணவர்கள் எந்தவித அச்சமுமின்றி வினாத்தாள்களை எதிர்கொண்டு கொடுக்கப்பட்ட வினாக்களை எளிதாக புரிந்துகொண்டு விடையளிக்கும் வகையில் புதியபாடத்திட்டத்தின் படியான வினாத்தாள் வடிவமைப்பினை அனைத்து மாணவ, மாணவியர்களும் புரிந்துகொள்ளும் வகையில் பயிற்சி அளித்திட வேண்டும். 

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தவறாமல் தினந்தோறும் மாவட்டத்தில் ஏதாவது ஒருபள்ளியை ஆய்வுசெய்து கற்றல் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் பணியினை ஆய்வு மேற்கொள்ளவேண்டும். 

பிற மாவட்டங்களில் பின்பற்றக்கூடிய சிறந்த கல்வி முறையை அறிந்து அவற்றை ஆசிரியர்களுக்கு விளக்கி பின்பற்றிட அறிவுறுத்த வேண்டும். மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையுடன் கல்விபயின்று அவர்கள் வாழ்வில் உயர்ந்தநிலையை எய்திட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றார். 

இதில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனுசாமி மற்றும் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Government schools should encourage academically disadvantaged students 

Villupuram, Dec30: The Collector has instructed to identify and encourage the students with education in Villupuram district government schools. Advisory Council for Government Teachers in Villupuram District Chairperson Annadurai presided over the headmasters and encouraged the students. Identify and promote the educationally disadvantaged. 

Teachers need to develop their teaching skills, and all school head teachers have to conduct research and teaching activities for all teachers working in their schools. Headmasters go to classrooms daily and ask students and students for feedback on the teaching work of each course teacher. 

Headmasters should instruct each lesson teacher to understand the lesson thoroughly and make it easy for students and students to teach the lesson with illustrative material. All students and students should be trained to understand the questionnaire format of the new course in order to make it easier for students to face and answer the questionnaires without fear. 

District Principal Officer and District Education Officers should regularly inspect any school in the district and examine the teaching and teaching work of the teachers. Teachers should be instructed to follow the best education system in other districts and explain them to teachers. 

Head teachers and teachers should be the best guide to help students and students to become confident and educate themselves. The meeting was attended by many others including District Principal Officer Munusamy and Headmasters.

No comments:

Post a Comment

Please Comment