இளநிலை, முதுநிலை மாணவர்கள் சமூக பணிகளில் ஈடுபடுவது கட்டாயம் யுஜிசி வழிகாட்டுதல் வெளியீடு - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

இளநிலை, முதுநிலை மாணவர்கள் சமூக பணிகளில் ஈடுபடுவது கட்டாயம் யுஜிசி வழிகாட்டுதல் வெளியீடு

இளநிலை, முதுநிலை மாணவர்கள் சமூக பணிகளில் ஈடுபடுவது கட்டாயம் யுஜிசி வழிகாட்டுதல் வெளியீடு 

 கிராமங்களை தத்தெடுத்து மேம்படுத்துதல் போன்ற சமூக பொறுப்பு பணிகளை இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் கட்டாய பாடமாக சேர்க்க யுஜிசி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பல்கலைக் கழக மானியக்குழு (யுஜிசி) செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின், அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: உயர்க்கல்வி நிறுவனங்கள் சமூகப் பொறுப்புக்கு பங்களிப்பு அளிக்கும் விதமாக ‘உன்னத் பாரத் அபியான் 2.0’ திட்டத்தை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2018-ம் ஆண்டு அமல்படுத்தியது. இந்த திட்டத்தின்படி நாடு முழுவம் உள்ள உயர்க்கல்வி நிறுவனங்கள் ஏதாவது ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதை மேம்படுத்த திட்டங்களை வகுக்க வேண்டும். 

மேலும், அந்த கிராம மக்களின் வாழ்க்கை முறை குறித்தும் மாணவர்கள் அறிந்து கொள்ள வழிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியது. அதையேற்று திட்டத்துக் கான வழிகாட்டு நெறிமுறை களை யுஜிசி தற்போது வெளி யிட்டுள்ளது. அதில், கிராமத்தை தத்தெடுத்து மேம்படுத்தும் சமூகப் பொறுப்பு பணிகளை அனைத்து இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளி லும் ஒரு கட்டாய பாடமாக சேர்க்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த வழிகாட்டுதல் கள் தொடர்பாக மண்டல வாரியாக கருத்தரங்குகள் நடத்தப்படும். கூடுதல் விவரங் களை யுஜிசி இணைதளத்தில் (https://www.ugc.ac.in) தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Please Comment