ஆப்கள் (Apps) உங்கள் தகவல்களை சேகரிக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா, அது எப்படி வாங்க பாப்போம். - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

ஆப்கள் (Apps) உங்கள் தகவல்களை சேகரிக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா, அது எப்படி வாங்க பாப்போம்.

ஆப்கள் (Apps) உங்கள் தகவல்களை சேகரிக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா, அது எப்படி வாங்க பாப்போம். 

இன்றைய கால கட்டத்தில் பல மோசடிகள் வந்து கொண்டே தான் இருக்கிறது அதில் மிக முக்கியமாக இருக்கிறது ஒருவரி தனியுரிமை தகவல்கள் திருட்டுப்போகிறது என்பது தான் மேலும் இது எப்படி லீக் ஆகிறது என்பது நம்முள் பல பேருக்கு இந்த விவரங்கள் தெரிவதில்லை, இது போன்ற பல லீக் குறைபாட்டால் பலரது பணம் வங்கியிலிருந்து காணாமல் போனது என்ற பல புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. மேலும் இது குறித்து பல ஆய்வு செய்யப்பட்டதை தொடர்ந்து பெயர்களில் மொபைல் போன்களில் இன்ஸ்டால் செய்யப்படும் பல தேவை இல்லாத செயலிகளால் இந்த விபரீதம் ஏற்படுகிறது என்ற பகிர் அறிக்கை ஒன்று வெளியானது 

எனவே நாம் இந்த நமக்கு தெரியாமல் எப்படி ஒரு செயலி நம் தகவல்களை சேகரிக்கிறது என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள். சமீபத்தில் கேஸ்பர்ஸ்கை எனும் சைபர்செக்யூரிட்டி நிறுவனம் பெரும்பாலான செயலிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து எவ்வாறு தகவல்களை சேகரிக்கின்றன என்பதை விளக்கும் கட்டுரையை வெளியிட்டது. கூகுளின் நேவிகேஷன் செயலி, வாடிக்கையாளர்களின் பொசிஷனிங் விவரங்களை கொண்டு அவர்கள் செல்லும் இடங்களை அறிந்து கொள்கின்றன மேலும் இதன் மூலம் பயனர்களின் தகவல்களை சேகரிக்கிறது. 

அதன் மூலம் ஆதாயம் பெறவோ விவரங்களை சேகரிக்கின்றன. செயலியின் மிக நுணுக்கமான விவரங்களை அறிந்து கொள்வதற்காக செயலியை உருவாக்கும் டெவலப்பர்கள் பல்வேறு விவரங்களை சேகரிக்கின்றனர். இதுபோன்ற செயலிகளை கண்டறிய பல்வேறு சேவைகளை பயன்படுத்த முடியும். ஆப்சென்சஸ் சேவையை கொண்டு செயலிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்தெந்த தகவல்களை சேகரிக்கின்றன என்பதையும் அவற்றை யாருக்கு அனுப்புகின்றன என்பதையும் அறிந்து கொள்ள முடியும். 

இதற்கு அந்த செயலிகள் டைனமிக் அனாலசிஸ் எனும் வழிமுறையை பயன்படுத்துகின்றன. இந்த செயலி மொபைல் சாதனத்தில் இன்ஸ்டால் செய்து, தேவையான அனுமதியை வழங்கிய குறிப்பிட்ட நேரத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இந்த சேவை செயலிகளை கண்காணித்து அவை எந்தந்த தகவல்களை அனுப்புகின்றன என்பதையும் அவற்றை யார்யாருக்கு அனுப்புகின்றன என்பதையும், அந்த தகவல்கள் என்க்ரிப்ட் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதையும் கவனிக்கும். 

இதேபோன்ற அம்சத்தை வழங்கும் மற்றொரு சேவை எக்சாடஸ் பிரைவசி. ஆப்சென்சஸ் போன்று இல்லாமல் எக்சோடஸ் பிரைவசி செயலிகளின் நடவடிக்கைக்கு மாற்றாக செயலியை பற்றி கண்காணிக்கும். இந்த சேவை செயலி பயன்படுத்தக் கேட்கும் அனுமதி, அதில் இருக்கும் பில்ட்-இன் டிராக்கர்கள், வாடிக்கையாளரின் தகவல்களை சேகரிக்க மூன்றாம் தரப்பு மாட்யூல் போன்றவற்றை ஆய்வு செய்யும். டெவலப்பர்கள் அடிக்கடி தங்களின் செயலிகளில் விளம்பர முகமைகளின் டிராக்கர்களை சேர்க்கின்றன. 

இதை கொண்டு தனிப்பட்ட விளம்பரங்களை வழங்க முடியும். தற்சமயம் எக்சோடஸ் பிரைவசி இதுபோன்று இயங்கும் 200 விதமாக டிராக்கர்களை கண்டறியும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இந்த சேவைகளை பயன்படுத்தி மருத்துவே ஈசியாக மேலும் நீங்கள் செயலியை எளிமையாக சர்ச் செய்தால் அவை எந்தெந்த தகவல்களை சேகரிக்கிறது என்றும் அவற்றை யாருக்கு அனுப்புகின்றன என்பதையும் அறிந்து கொள்ளலாம். மேலும் ஆப்ஷன்ஸ் ஆப்சென்சஸ் போன்று இல்லாமல் எக்சோடஸ் லிஸ்டில் உள்ள செயலிகளை மட்டுமின்றி நியு அனாலசிஸ் டேப் கொண்டு கூகுள் பிளேவில் உள்ள செயலிகளையு பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Please Comment