தமிழகத்தில் இடைவிடாமல் வெளுக்கும் மழை.. பல மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

தமிழகத்தில் இடைவிடாமல் வெளுக்கும் மழை.. பல மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

PLEASE READ SOURCE NEWS HERE


தொடர் மழை காரணமாக சென்னை, கடலூர், தூத்துக்குடி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் தூத்துக்குடி, திருவள்ளூர்,  மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கிய மழை, இன்றும் இடைவிடாமல் கனமழையாக பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களில் இல்லாத அளவாக 165 மில்லி மீட்டர் அளவுக்கு தூத்துக்குடி நகரில் மழை பெய்துள்ளது. சாத்தான்குளம், தூத்துக்குடி, குலசேகரப்பட்டினம், திருச்செந்தூரில் அதீத கனழை பெய்துள்ளது. இதேபோல் காயல்பட்டினம், ஸ்ரீவைகுண்டம், வைப்ர், முரப்பனாடு, கீழ் அரசதி, ஒட்டப்பிடாரம், கயதார் உள்ளிட்ட இடங்களிலும் மிக கனமழை பெய்துள்ளது.பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் தூத்துக்குடி நகர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி உள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (திங்கள்கிழமை) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். 

விடுமுறை அறிவிப்பு 

இதேபோல் கடலூர் மாவட்டத்திலும் மிக மிக அதீத கனமழை பெய்துள்ளது. கடலூர், சேத்தியார் தோப்பு, சிதம்பரம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 100 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. கடலூர் நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்திலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

  ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக நாளை(திங்கள்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(திங்கள்கிழமை ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் விடாமல் பெய்து வரும் கனமழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் நாகை மாவட்டங்களுக்கும் திங்கள்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோல் புதுச்சேரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது விடுமுறை இல்லை இதனிடையே சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். 

அதேநேரம் கனமழையால் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. 

 தேர்வுகள் ஒத்திவைப்பு 

 இதேபோல் கனமழையால் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

 ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கு   மட்டும் விடுமுறைONE INDIA news


No comments:

Post a Comment

Please Comment