அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத 6 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முடிவு  - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத 6 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முடிவு 

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத 6 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முடிவு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் கல்வித் துறை தீவிரம் 

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர், காவலர் உட்பட 6 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வியின்கீழ் 37,211 அரசுப் பள்ளிகள் இயங்கு கின்றன. இப் பள்ளிகளில் 48 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கல்வி கற்பிப் பதற்காக 2.3 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். 

இந்நிலையில் அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஆய்வக உதவியா ளர், தட்டச்சர், காவலர் உட்பட ஆசிரியரல்லாத காலிப்பணியிடங் களை நிரப்ப கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் தட்டச்சர், எழுத்தர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், காவலர், தோட்டப் பராமரிப்பாளர், துப்புர வாளர் உட்பட ஆசிரியரல்லாத பல்வேறு பணிகளில் 6 ஆயிரம் இடங்கள் வரை காலியாக உள்ளன. 

 கற்பித்தல் பணி பாதிப்பு இவை நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருப்பதால் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பணிச்சுமை ஏற்படுகிறது. குறிப்பாக எழுத்துப் பணிகளை ஆசிரியர்கள் கவனிக்க வேண்டியுள்ளது. இதனால் கற் பித்தல் பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இதேபோல், காவலர்கள் இல்லாததால் பள்ளி வளாகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. சமூக விரோதிகளால் இரவு நேரங்களில் கட்டிடங்கள் மற்றும் குழாய்களை சேதப்படுத்துதல் போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படு கின்றன. துப்புரவு பணிகளுக்கு உள்ளாட்சி அமைப்பின் ஊழியர் களைக் கொண்டும், சில பள்ளி களில் தற்காலிக ஊழியர்களைக் கொண்டும் சமாளிக்கின்றனர். 

 எனவே, இப்பணிகளுக்கு பணி யாளர்களை நியமிக்கக் கோரி அரசிடம் நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டது. நிதிச்சுமை காரணமாக தாமத மான நிலையில் தற்போது அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை யடுத்து அனைத்துப் பள்ளிகளி லும் ஏற்கெனவே உள்ள காலி யிடங்கள் மற்றும் கூடுதலாக தேவைப்படும் பணியாளர்கள் எண்ணிக்கை குறித்த விவரங் கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. 

அந்தப் பணிகள் நிறைவடைந் ததும் பணியாளர்கள் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும். இதுதவிர தொண்டு நிறுவனங் களின் உதவியோடு அரசுப் பள்ளி களில் சுற்றுச்சுவர், இரும்பு கதவு அமைத்தல், கழிவறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எமிஸ் இணையதளம் வழியாக தலைமை ஆசிரியர்களிடம் அதற்கான விவரங்கள் கோரப்பட்டுள்ளன. 

 இந்த பணிகள் முடிக்கப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப் படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர். அனைத்துப் பள்ளி களிலும் ஏற்கெனவே உள்ள காலியிடங்கள், கூடுதலாக தேவைப்படும் பணியாளர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படு கின்றன. அந்தப் பணிகள் நிறைவடைந்ததும் பணியாளர் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும்.

The Department of Education has decided to fill six thousand vacancies in government schools, including a laboratory assistant and guard in government schools. There are 37,211 government schools in Tamil Nadu. 

There are 48 lakh students and students studying in these schools. There are 2.3 lakh teachers for education. The government is taking various measures to improve the quality of public schools. Accordingly, the Department of Education is planning to fill non-teaching jobs including Lab Assistant, Typewriter and Guard. According to school officials, there are up to 6,000 vacancies in non-teaching jobs, including typewriters, clerks, lab assistants, office assistants, guards, gardeners and cleaning staff. 

The Impact of Teaching Work These are long overdue workloads for head teachers and teachers. Teachers especially need to take note of writing tasks. This greatly affects the work of plagiarism. Similarly, the absence of guards makes the safety of the school campus questionable. Social hostility can cause nightmares such as damaging buildings and pipes at night. 

They also deal with local staff for cleaning work, as well as temporary staff at some schools. Therefore, it has been a long time demanded from the government to recruit staff for these tasks. The government has now agreed to delay due to financial difficulties. This is followed by the collection of existing vacancies in all schools and the number of additional staff required. When the work is completed, the employees will be notified about the selection. In addition, with the help of NGOs, infrastructure work has been intensified in public schools, including the construction of a circular iron gate and toilet. 

Details have been requested to the Editors via the Emis website. The work will be completed and public schools will be upgraded to private schools. Thus said the authorities. Information about the existing vacancies and the need for additional staff is being collected in all schools. Once those tasks are completed, the employee will be notified of the selection.

No comments:

Post a Comment

Please Comment