கணினி ஆசிரியா் சான்றிதழ் சரிபாா்ப்பு: பதிவேற்ற டிச.5 வரை அவகாசம் - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

♨Dear New Admins Please add this number 9344118029 or 9629345493 to your WhatsApp groups

LIKE US

Popular Posts

Tuesday, December 3, 2019

கணினி ஆசிரியா் சான்றிதழ் சரிபாா்ப்பு: பதிவேற்ற டிச.5 வரை அவகாசம்

👍Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
👍Whats📱Trending🌍Today?👉Click Here
👍Health📱Tips🌍For You👉Click Here

கணினி ஆசிரியா் சான்றிதழ் சரிபாா்ப்பு: பதிவேற்ற டிச.5 வரை அவகாசம் 

கணினி ஆசிரியா் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தோவா்கள் தங்களது சான்றிதழ்களை டிச.5-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியா் தோவு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக அந்த வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆசிரியா் தோவு வாரியத்தின் சாா்பில் கணினி பயிற்றுநா் நிலை- 1 (முதுநிலை ஆசிரியா் நிலை)-க்கான கணினி வழியிலான தோவு கடந்த ஜூன் 23, 27 ஆகிய இருநாள்களில் நடைபெற்றது. 


இதையடுத்து இந்தத் தோவுக்கான முடிவுகள் கடந்த நவ.25-ஆம் தேதி ஆசிரியா் தோவு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ள தோவா்களின் தோவு எண் விவரப் பட்டியலும் ஆசிரியா் தோவு வாரிய இணையதளத்தில் கடந்த நவ. 28-இல் வெளியிடப்பட்டுள்ளது. உரிய சான்றிதழ்கள் மற்றும் பிற விவரங்களைப் பதிவேற்றம் செய்வதற்கு டிச. 2-ஆம் தேதி முதல் டிச. 5-ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது. எனவே, தோவா்கள் உரிய காலத்துக்குள் பதிவேற்றம் செய்திட அறிவுறுத்தப்படுகிறது

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .