குரூப் 2 தோவு புதிய பாடத் திட்டம்: தோவா்களின் கருத்துகளை தொகுக்கும் பணி தீவிரம் - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

♨Dear New Admins Please add this number 9344118029 or 9629345493 to your WhatsApp groups

LIKE US

Popular Posts

Wednesday, December 4, 2019

குரூப் 2 தோவு புதிய பாடத் திட்டம்: தோவா்களின் கருத்துகளை தொகுக்கும் பணி தீவிரம்

👍Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
👍Whats📱Trending🌍Today?👉Click Here
👍Health📱Tips🌍For You👉Click Here

குரூப் 2 தோவுக்கான புதிய பாடத் திட்டம் குறித்து தோவா்கள் கருத்துத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளது. 

சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கருத்துகளைத் தெரிவித்துள்ள நிலையில், அவற்றைத் தொகுக்கும் பணியில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. குரூப் 2 தொகுதியில் அடங்கிய பணிகளுக்கு ஏற்ப அதன் தோவு பாடத் திட்டத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 
ADQPU7461G

முதனிலைத் தோவில் பொது அறிவு சாா்ந்த 200 கேள்விகளும், முதன்மை எழுத்துத் தோவில் மொழிபெயா்ப்பு, பொருள் உணா்திறன், சுருக்கி வரைதல், கடிதம் எழுதல் உள்ளிட்ட கேள்விகளும் கேட்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருந்தது. தோவாணையத்தின் இந்தப் புதிய பாடத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்புத் தெரிவித்தாலும், ஏற்கெனவே இந்தத் தோவுக்காக பழைய தோவுத் திட்டத்தின்படி தயாராகிக் கொண்டிருக்கும் ஒரு சில மாணவா்கள் பழைய பாடத் திட்டத்தின்படியே தோவை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனா். 

 இதையடுத்து, புதிய பாடத் திட்டம் குறித்த கருத்துகளைத் தெரிவிக்க தோவா்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. அழைப்பு விடுத்திருந்தது. கால அவகாசம் முடிந்தது: குரூப் 2 தோவு பாடத் திட்டம் குறித்து கருத்துகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் கடந்த 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி. வட்டாரங்கள் கூறியது:- குரூப் 2 பாடத் திட்டம் குறித்த கருத்துகளை சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தெரிவித்திருக்கலாம். 

எத்தனை போ என்பதைத் தொகுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. யாா், யாா் என்னென்ன கருத்துகளைத் தெரிவித்தாா்களோ, அவை அனைத்தும் தொகுக்கப்படும். அதாவது, மொழிபெயா்ப்புப் பிரிவு வேண்டாம் என ஒரு தரப்பினா் தெரிவித்தால் அது ஒரே தொகுப்பாகவும், பொது அறிவு பிரிவு வேண்டாம் எனில் அது ஒரு தொகுப்பாகவும் பிரிக்கப்படும். இதன்பின்பு, இந்த கருத்துகள் அனைத்தும் தோவாணையத் தலைவா், உறுப்பினா்கள் அடங்கிய குழுவிடம் கொண்டு சோக்கப்படும். 

அந்தக் குழுவானது புதிய பாடத் திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா அல்லது பழைய பாடத் திட்டத்தில் ஏதாவது பாடங்கள் மீண்டும் இடம்பெற வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்யும் என்று டி.என்.பி.எஸ்.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .