2020 NEET தேர்வுக்கு பள்ளிகளிலேயே ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு: கல்வி அலுவலர் தகவல் - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

♨Dear New Admins Please add this number 9344118029 or 9629345493 to your WhatsApp groups

LIKE US

Popular Posts

Wednesday, December 4, 2019

2020 NEET தேர்வுக்கு பள்ளிகளிலேயே ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு: கல்வி அலுவலர் தகவல்

👍Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
👍Whats📱Trending🌍Today?👉Click Here
👍Health📱Tips🌍For You👉Click Here

2020 NEET தேர்வுக்கு பள்ளிகளிலேயே ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு: கல்வி அலுவலர் தகவல் 

 மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் சித்த மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நடைமுறையில் உள்ளது. நீட் தேர்வுக்கு அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் வாராந்திர இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 

இந்த நிலையில், வரும் 2020ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3ம் தேதி நடக்க உள்ளது. இந்தாண்டும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடக்கும். நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது நேற்று முன்தினம் 2ம் தேதி தொடங்கியது. விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.ஆயிரத்து 500ம் பொது, இ.டபிள்யு.எஸ், ஒபிசி-என்சிஎல் பிரிவினருக்கு ரூ.1400ம், எஸ்சி., எஸ்டி., பிடபிள்யு, மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரூ.800ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் விண்ணப்பிக்க வருகிற ஜனவரி 1ம் தேதி முற்பகல் 11.50 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும். இதற்கான அதிகாரப்பூர்வமான என்டிஏ இணையதளமான ntaneet.nic.in. என்ற இணையதளத்தில் அனுப்ப வேண்டும். வேறு வடிவத்திலான விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. ஒரு மாணவர் ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்ப வேண்டும். 

தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி விண்ணப்பங்களை கவனமாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தில் மாணவர்கள் தங்களது இணையதள முகவரி மற்றும் கைபேசி எண் தெரிவிக்க வேண்டும். இதில் உரிய தகவல்கள் தெரிவிக்கப்படும். 

 தேர்வு நாளில் தேர்வு எழுத வரும் மாணவர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு ெசாந்த செலவில் அனுமதிக்கப்பட்ட அட்மிட் கார்டுடன் கட்டாயம் வரவேண்டும் என்பது உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கியதை அடுத்து ஆர்வம் உள்ள மாணவ மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர். 

தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் இணையதள மையங்களிலும் ஆன்லைன் பதிவு நடக்கிறது. இதுகுறித்து நெல்லை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பூபதி கூறுகையில், ''அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவ மாணவிகளில் விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு பள்ளிகளிலேயே அதற்குரிய உதவிகளை தலைமையாசிரியர்கள் செய்யவேண்டும். இலவச பயிற்சி மையங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் விருப்பம் உள்ள மாணவர்களுக்கு வாராந்திர நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் வாரங்களில் இந்த பயிற்சி மேலும் தீவிரப்படுத்தப்படும்'' என்றார்.

2020 NEET Examination to apply online in schools There are weekly free special workshops held in government and government aided schools for NEET exams. 

At this juncture, the NEET 2020 exam is scheduled for May 3. This year the selection will be held from 2pm to 5pm and 3pm. Applying online for the NEET exam began yesterday at 2 p.m. The application fee is fixed at Rs. 500 for general public, Rs. The deadline for applying online is January 1st at 11.50am. Applications should only be sent online. 

The official NTA website for this is ntaneet.nic.in. To be sent to the website. No other application will be accepted. A student must send only one application. Applications should be duly filled and forwarded according to the instructions. In the online application, students must report their website address and mobile number. The relevant information will be provided. 

Students who write the exam on the day of the exam must be admitted to their chosen examination center with a sanctioned Admit Card at a fraction of the cost. Interested students are applying online. Online registration takes place in private matriculation schools and online centers. 

Nellai District Chief Education Officer Bhupathi said, “Headmasters should provide assistance to the government and government-aided schools for those who want to apply for NEET exams. Free Training Centers A weekly NEET exam is offered to students who wish to attend government and government aided schools. The training will be intensified in the coming weeks. ”


No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .