கணினி ஆசிரியர் பணித்தேர்வு சான்றிதழ் சரிபார்ப்புக்கு 1,565 பேர் தேர்வு - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Sunday, December 1, 2019

கணினி ஆசிரியர் பணித்தேர்வு சான்றிதழ் சரிபார்ப்புக்கு 1,565 பேர் தேர்வு

கணினி ஆசிரியர் பணித்தேர்வு சான்றிதழ் சரிபார்ப்புக்கு 1,565 பேர் தேர்வு கணினி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு 1,565 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 824 முதுநிலை கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டு, கடந்த ஜூன் மாதம் 23, 27-ம் தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 26,882 பேர் எழுதிய இந்த தேர்வில் 1,758 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வான பட்ட தாரிகள் விவரம் தேர்வு வாரிய இணையதளத்தில் (http://trb.tn.nic.in/Default.htm) வெளியிடப்பட்டுள்ளது. 


இதையடுத்து சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க உள்ளவர்கள் அதற்குரிய சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை நாளை (டிச.2) தொடங்கி டிசம்பர் 5-ம் தேதிக்குள் இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி, இடம் குறித்த விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும். இவ்வாறு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Please Comment