அலர்ட் பெற்றோர்களே... 10-ல் 8 குழந்தைகள் ஒருநாளில் ஒரு மணி நேரம்கூட விளையாடுவதில்லை! #WHOReport* - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Wednesday, December 4, 2019

அலர்ட் பெற்றோர்களே... 10-ல் 8 குழந்தைகள் ஒருநாளில் ஒரு மணி நேரம்கூட விளையாடுவதில்லை! #WHOReport*

அலர்ட் பெற்றோர்களே... 10-ல் 8 குழந்தைகள் ஒருநாளில் ஒரு மணி நேரம்கூட விளையாடுவதில்லை! WHO Report

டீன் ஏஜ் குழந்தைகளில், உலகளவில் பத்தில் எட்டு பேர் உடலுழைப்பே இல்லாமல் இருக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை ஆதாரபூர்வமாகக் கடந்த வாரம் கூறியுள்ளது உலக சுகாதார நிறுவனம். 

அலர்ட் பெற்றோர்களே... 10-ல் 8 குழந்தைகள் ஒருநாளில் ஒரு மணி நேரம்கூட விளையாடுவதில்லை! #WHOReport*
ADQPU7461G
இந்தியாவில் மட்டும் 73.9 சதவிகித வளரிளம் பருவத்தினர் உடலுழைப்பின்றி இருக்கின்றனராம். லேன்செட்டின் `குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கான உடல்நலம்' குறித்த கையேட்டில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

`உலக சுகாதார நிறுவனத்தின் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அனைவருமே, 11 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள்தாம். பொதுவாகவே, 11 - 17 வயது இடைவேளையின்போதுதான் குழந்தைகள் உடலளவிலும் மனதளவிலும் வளர்ச்சியடைவார்கள். அதனாலேயே இந்தக் காலகட்டத்தை `வளரிளம் பருவம்' என மருத்துவர்கள் குறிப்பிடுவது உண்டு. 


உடல் சார்ந்த அனைத்து வளர்ச்சிகளையும், அவற்றால் மனதளவில் ஏற்படும் மாற்றங்களையும் இந்தப் பருவத்தில் குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு அடிப்படை, இரண்டு விஷயங்கள். அவை ஆரோக்கியமான உணவு மற்றும் நெறிப்படுத்தப்பட்ட வாழ்வியல் முறைகள்.

இதில் குறிப்பிடப்பட்ட `நெறிப்படுத்தப்பட்ட வாழ்வியல் முறை'களில் முக்கியமானது உடலுழைப்பு. உடலுழைப்பு என்பது உடற்பயிற்சியாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. ஏதேனுமொரு விளையாட்டாகக்கூட அது இருக்கலாம். `குழந்தை ஆக்டிவாக இருக்க வேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்திருக்கக் கூடாது' என்பது மட்டும்தான் கான்செப்ட். ஆனால், இன்றைய குழந்தைகள் விளையாட்டுக்குக்கூட ஆக்டிவாக இல்லை என்பதுதான் பிரச்னை!

1. * தினமும் வெயிலில் நேரம் செலவழிக்கும் குழந்தைகளுக்கு, வைட்டமின் - டி குறைபாடு ஏற்படாது. இதனால் சருமப் பிரச்னைகள் தொடங்கி சத்துக் குறைபாடு வரை பல பிரச்னைகளை அவர்கள் வருங்காலத்தில் தவிர்க்கலாம்.

2. * போதுமான அளவு உடலுழைப்பு இருக்கும் பெண் குழந்தைகளுக்கு சீரற்ற மாதவிடாய், ஹார்மோன் சமச்சீரின்மை போன்றவை தடுக்கப்படும்.

ADQPU7461G
3. * இன்றைய குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமன் மற்றும் உடல் மிகவும் மெலிந்து காணப்படுதல் போன்ற பிரச்னைகள் முழுமையாகத் தடுக்கப்படும்.

4. * இன்றைய தேதியில் பெரும்பாலான பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் `விரைவில் பூப்படைந்துவிடும்' பிரச்னை தடுக்கப்படும். குழந்தைகள், சரியான நேரத்தில் சரியான பருவத்தில் பூப்படைவர்.

5. * உடலுறுப்புகள் வளர்ச்சி அடைவது, குரல் மாற்றங்கள், ஹார்மோன் மாற்றங்கள், எலும்பு வளர்ச்சி என எல்லா விதமான உடல் சார்ந்த அனைத்து மாற்றங்களும் வளர்ச்சிகளும் குழந்தைகளுக்கு டீன்ஏஜில்தான் இருக்கும். இவை அனைத்தையும் ஒருசேர எதிர்கொள்ளும்போது, மனதளவிலான பல மாற்றங்களையும், அவர்கள் எதிர்கொள்வர்.

இதற்குக்கூட, உடலுழைப்பு உதவிபுரியும். தினமும் நண்பர்களுடன் பேசி, சிரித்து விளையாடும் குழந்தைகளுக்கு, மனத்தடைகள் இருக்காது. விளையாட்டிலேயே வளரும் குழந்தைகள் வாழ்வில் வெற்றி, தோல்விகள் அனைத்தையும் ஆரோக்கியமாக எடுத்துக்கொள்வர். ஆக, குழந்தைகள் ஆரோக்கியமான முறையில் தங்களின் பதின் பருவத்தைக் கடக்க உடலுழைப்பு கட்டாயம் தேவை!

6. * தினமும் ஒரு மணி நேரம் விளையாடும் குழந்தைகள் அன்றாட வாழ்வில், புத்துணர்வோடும் சுறுசுறுப்போடும் இருப்பர். சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகளுக்கு, படிப்பின்மீதான ஆர்வமும் கவனமும் இயல்பாகவே இருக்கும்.

7. * கவனச்சிதறல், அதீத சுறுசுறுப்பு, அடிக்கடி பதற்றமடைவது போன்ற நடத்தை சார்ந்த பிரச்னைகள் சரிசெய்யப்படும்.

8. * பசியின்மை, தூக்கமின்மை போன்ற பிரச்னைகளிலிருந்து குழந்தைகள் காக்கப்படுவர்.

9. * சிறுவயதிலிருந்தே ஆரோக்கியமாக வளரும் குழந்தைகளுக்கு வளர்ந்த பின்னர் சர்க்கரைநோய், இதயப் பிரச்னைகள், ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற வாழ்வியல் நோய் பாதிப்புகளெல்லாம் தடுக்கவும் தவிர்க்கவும்படும்! மரபு ரீதியாக பிரச்னை ஏற்படலாம் என்பவர்களுக்கும்கூட, பிரச்னை தள்ளிப்போடப்படும். அதாவது 35 வயதில் ஏற்படவிருக்கும் பிரச்னை, 50 வயதில் ஏற்படும்!

10. * உடலுழைப்பு இல்லாத குழந்தைகளைக் கவனித்துப் பார்த்தால் அவர்கள் அனைவரும் மொபைல் அதிகம் உபயோகிப்பவர்களாக இருப்பார்கள். இதனால் அவர்களின் உடலின் தோற்றமே மாறிப்போயிருக்கும். முதுகு, நேராக இருக்காது. தோற்றமே வளைந்து காணப்படும். வெளியில் - வெயிலில் விளையாடும் / வியர்வை வெளியேறும் வகையில் உடற்பயிற்சி செய்யும் குழந்தைகளுக்கு இப்படியான பிரச்னைகள் ஏற்படாது!

ஆகவே, பெற்றோரே இனியாவது உங்கள் குழந்தைகளை விளையாட விடுங்கள். பல பெற்றோரும் குழந்தைகளிடம் `படிப்பே பிரதானம்' எனச் சொல்வதைக் காணமுடிகிறது. `படிப்பு பிரதானம்தான். ஆனால், விளையாட்டும் உடலுழைப்பும் அதைவிட முக்கியம்' என்பதை உணர வேண்டும். தினந்தோறும் படிப்பதற்கு நேரம் ஒதுக்குவதைப்போல, தினமும் விளையாடுவதற்கும் பிள்ளைகளைப் பழக்கப்படுத்தப்பட வேண்டும். இது பெற்றோரின் கடமையும்கூட.

உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள், வரும் ஆண்டுகளில் குறையாவிட்டால், நம் அடுத்த தலைமுறையின் ஆரோக்கியமே கேள்விக்குறியாகும் என்பதை, பெற்றோர் அனைவரும் உணர வேண்டும். இது பெற்றோர்களுக்கான எச்சரிக்கை மணி இனியாவது விழித்துக்கொள்வோம்!" என்கிறார் அவர்.

ADQPU7461G
Last week, the World Health Organization reported on the shocking news that eight out of ten children worldwide are inactive. In India alone, 73.9% of adolescents are inactive. The results of the study were published in The Lancet's "Health for Children and Adolescents".

All the subjects included in the study were children between the ages of 11 and 17. Generally, children develop physically and mentally between the ages of 11 - 17 years. That is why doctors refer to this period as the 'Variyalam season'. During this period, children will have to face all physical developments and mental changes. Basic to it, two things. They are a healthy diet and a streamlined lifestyle.

One of the most well-known 'regulated ecosystems' is physical activity. Exercise does not have to be physical exercise. It could even be any game. `The child must be active. Not to be in one place 'is the only concept. But today's children are not even active in the game!

1. * Vitamin D deficiency does not occur in children who spend time in the sun every day. They can avoid many problems ranging from skin problems to malnutrition.

2. * Pregnant women who have adequate physical activity are prevented from having irregular menstruation and hormonal imbalances.

3. * Obesity and obesity in today's children can be completely prevented.

4. * To date, most girls will be confronted with the 'soon to be matured' problem. Children, the perfect season for the right person.

5. * All kinds of physical changes and developments, such as body development, voice changes, hormonal changes, bone growth, are in children's teenage. When confronted with all of these, they will face many changes in mood.

Even so, bodybuilding can be helpful. Children who talk and laugh with friends every day have no restrictions. Children who grow up in the game take on all the successes and failures in life. Therefore, children need physical exercise to reach their teens!

6. * Children who play for an hour every day will be refreshed and energized in their daily lives. For active children, the interest and attention to study is normal.

7. * Behavioral problems such as distractions, excessive agility, and frequent tension can be corrected.

8. * Children will be protected from problems such as hunger and insomnia.

9. * When healthy children grow from childhood, they can prevent and avoid biological diseases such as diabetes, heart problems, blood pressure and heart attack! Even for those who may have inherited the problem, the problem is postponed. This means that the problem will occur at the age of 35, at the age of 50!

10. * When looking at children who are not physically active, they are all over mobile. This will change the appearance of their body. Spine, not straight. The appearance is bent. Outdoors - Kids who play in the sun / exercise to sweat will not have such problems!

So, let your children play as parents. Many parents find their children saying "step is important". `Study is mainstream. But you have to realize that sports and physical activity are more important than that. Children should be accustomed to play and play everyday, as if they were given time to study. It is also the duty of parents.

All parents should realize that if the World Health Organization data does not diminish in the coming years, the health of our next generation is in question. This is a wake-up call for parents! ”She says.No comments:

Post a Comment

Please Comment