இன்றைய சிந்தனை. 04 /12/2019 - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

♨Dear New Admins Please add this number 9344118029 or 9629345493 to your WhatsApp groups

LIKE US

Popular Posts

Wednesday, December 4, 2019

இன்றைய சிந்தனை. 04 /12/2019

👍Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
👍Whats📱Trending🌍Today?👉Click Here
👍Health📱Tips🌍For You👉Click Here

இன்றைய சிந்தனை.( 04..12.2019.):...............................

 உடலிலுள்ள குறைகளை.
................................

இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகானவை..

மனிதனும் அது போலத்தான். ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து தோற்றத்தில், குணத்தில், திறமைகளில் என எல்லா வகையிலும் வேறுபடுகின்றனர்..

குறைகள் ஒவ்வொருவர் இடத்திலும் இருக்கத்தான் செய்கின்றன.

அதை பெரிதாய் நினைத்து வருந்துகிறவன் உல்கையே வெறுத்துப் போய்ப் பார்க்கிறான்

அதை உடைத்து எழுபவன் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிறான்..

உலகத்தில் இயல்பான மனிதர்கள் படைக்கும் சாதனையைவிட மாற்றுத் திறனாளிகள் படைக்கும் அரும் பெரும் சாதனைகள்  பல என்றே சொல்லலாம்

.தங்கள் உடலிலுள்ள குறைகளை துச்சமாய் மிதித்து, வாழ்க்கை என்னும் சமுத்திரத்தில் எதிர் நீச்சல் அடித்து உலகின் பார்வையை தங்கள் மீது திருப்பிய ஒரு சில சாதனை யாளர்களை பார்ப்போம்.

ADQPU7461G தடையைத் தாண்டியவர்கள்..
.................................

ஹெலன் ஹெல்லர்..
...................................

சிறுவயதில் வந்த மர்மக் காய்ச்சலால் பேசும் திறனையும் கேட்கும் திறனையும் இழந்த ஹெலன் ஹெல்லர்..

 தடையை வென்று சைகை மொழியைக் கற்றுக் கொண்டு பல நுால்களை எழுதிய எழுத்தாளராக நாற்பது நாடு களுக்குப் பயணித்த சொற்பொழிவாள ராகத் தன்னை மாற்றிக் கொண்டார்.

நடனக்கலைஞர் சுதா சந்திரன்..
..................................

புகழ்பெற்ற நடனக் கலைஞரான சுதா சந்திரன், 17 வயதில் விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்தார்...

ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் செயற்கைக்கால் மாட்டி நடக்கத் தொடங்கினார். முயற்சியாலும் பயிற்சியாலும் மீண்டும் நடனமாடத் தொடங்கினார்.

தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு..
.................................

மாற்றுத்திறன் பெற்ற தடகள வீரரான மாரியப்பன் தங்கவேலு, உலக பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று உயரம் தாண்டுதலில் டி- 42 பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றார்..

சாதனைகள் படைக்க உடல் குறைபாடு ஒரு தடையல்ல என்பதற்குச் சான்றாய் உலகில் பலர் திகழ்ந்தனர்; திகழ்கின்றனர்..

ஆம்.,நண்பர்களே..,

இவர்கள் மட்டுமல்ல இவர்கள் போல பலரும் தங்களின் உடல் குறைபாடு  இருந்தாலும் தங்களின் உள்ளம் உறுதியால் பல சோதனைகளை சாதனைகளாக மாற்றியுள்ளனர்.

உடலில் இருக்கும் ஒவ்வொரு நரம்பிலும் நம்பிக்கை வேரூன்றி இருக்க வேண்டும். மனம் திடமாய் இருந்தால் போதும் செவ்வாய் கிரகத்திற்கே செல்ஃபி எடுக்கச் செல்லலாம்.🌹🙏🏻💐

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .