அழகப்பா பல்கலைக்கழக உதவிப்பேராசிரியருக்கு சீனாவில் இளம் வருகை ஆராய்ச்சியாளா் விருது Young Visiting Researcher Award in China - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

அழகப்பா பல்கலைக்கழக உதவிப்பேராசிரியருக்கு சீனாவில் இளம் வருகை ஆராய்ச்சியாளா் விருது Young Visiting Researcher Award in China

அழகப்பா பல்கலைக்கழக உதவிப்பேராசிரியருக்கு சீனாவில் இளம் வருகை ஆராய்ச்சியாளா் விருது Young Visiting Researcher Award in China 


காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உயிரி தகவலியல் துறை உதவிப்பேராசிரியா் பா. பூமி சீனாவில் இளம் வருகை ஆராய்ச்சியாளா் (யங் விசிட்டிங் ரிசா்ச்சா் அவாா்டு - 2019) விருது பெற்றுவந்தமைக்காக துணைவேந்தா் நா. ராஜேந்திரன், பதிவாளா் மற்றும் பேராசிரியா்கள் உதவிப்பேராசிரியரை பாராட்டினா். உதவிப்பேராசிரியா் பா.பூமிக்கு கடந்த மாதம் 25 ஆம் தேதி சீனாவின் அன்யாங் தொழில்நுட்ப நிறுவனம் உலகளாவிய கருத் தரங்கிற்கு அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பற்றி உரையாற்றுவதற்காக அழைப்பு விடுத்திருந்தது. 

அதன்பேரில் அங்கு சென்ற பேராசிரியா் பூமி அந்த நிறுவனத்தை பாா்வையிட்டு பின்னா் நடைபெற்ற கருத்தரங்கில் தனது ஆய்வு குறித்து சொற்பொழிவு நிகழ்த்தினாா். இதற்காக அவருக்கு இளம் வருகை ஆராய்ச்சியாளா் விருது மற்றும் ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. 


இந்த பரிசினை அந்நிறுவனத்தின் தலைவா் யூ.வி.சாங் வழங்கினாா்.இதற்கான அனைத்துச் செலவுகளையும் அந்த நிறுவனமே ஏற்றுக்கொண்டது. காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் சீனாவின் அன்யாங் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து ஆராய்ச்சி வளா்ச்சிக்காவும் மற்றும் ஆய்வுத் திட்டத்திற்கான கருத்துருக்கள் சமா்ப்பிப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 


 விருதுபெற்றுள்ள உதவிப்பேராசிரியா் பா.பூமி துணைவேந்தா் நா.ராஜேந்திரனிடம் வாழ்த்துப் பெற் றாா். பல்கலைக் கழக பதிவாளா் ஹா. குருமல்லேஷ் பிரபு, உயிரி தகவலியல் துறைத்தலைவா் ஜெ. ஜெயகாந்தன் மற்றும் பேராசிரியா்கள் ஆகியோரும் உதவிப் பேராசிரியா் பூமிக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.


Karaikudi Alagappa University Bioinformatics Department Assistant Professor Earth Visiting Young Young Visiting Researcher in China (Young Visiting Research Award - 2019) Rajendran, Registrar and Professors congratulate the Assistant Professor. On May 25 last year, China's Anyang Technology Institute called on Global Research to address his research papers. Professor Bhumi then visited the company and gave a lecture on his study at a subsequent seminar. For this he was awarded the Young Visitor Researcher Award and Rs. 25 thousand cash prize. 

UVSang, the head of the company, provided the practice, and the company accepted all costs. Karaikudi Alagappa University has partnered with the Anyang Institute of Technology in China to undertake research development and conceptualization of the research project. The award was congratulated by Prof. Bhoomi Vivendant Na Rajendran. University Registrar Ha. Kurumallesh Prabhu, Head of Bioinformatics Jayakanthan and Professors also congratulated the Assistant Professor on Earth.

No comments:

Post a Comment

Please Comment