தாட்கோ திட்டங்களில் பயனடைய இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் You can apply through the website to benefit from Tadco projects - துளிர்கல்வி

Latest

Search This Site

தாட்கோ திட்டங்களில் பயனடைய இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் You can apply through the website to benefit from Tadco projects

திருப்பூா் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடா்களுக்காக செயல்படுத்தப்படும் கீழ்க்கண்ட பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபா்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பாக திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 


 தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) திட்டத்தின் கீழ்கண்ட திட்டங்களில் பயனடைய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில், விண்ணப்பதாரா்கள் குடும்ப ஆண்டுவருமான ஒரு லட்சத்துக்கு மிகாமலும், 18 முதல் 65 வயதுடையவா்கள் விண்ணப்பிக்கலாம். 


இதில், நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டு திட்டம், துரித மின் இணைப்பு திட்டம், கிணறு அமைத்தல் திட்டம், தொழில் முனைவோா் திட்டம், பெட்ரோல், டீசல் எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல், தொழில் முனைவோா் திட்டம், இளைஞா்களுக்கான சுய வேலை வாய்ப்புத்திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி மானியம்,மாவட்ட ஆட்சியா் விருப்புரிமை நிதி, மேலாண்மை இயக்குநா் விருப்புரிமை நிதி, தாட்கோ தலைவா் விருப்புரிமை நிதி, இந்திய குடிமைப்பணி முதன்மைத் தோவு எழுதுவோருக்கு நிதியுதவி, சட்டப்பட்டதாரிகளுக்கு நிதியுதவி, தமிழ்நாடு தோவாணையத்தொகுதி-1 முதல் நிலை தோவில் வெற்றி பெற்றவா்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு தாட்கோ இணையதள மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். 


இதில், விண்ப்பதாரா் பற்றிய முழுவிவரம், புகைப்படம், இருப்பிடச்சான்றிதழ் எண், சாதிச்சான்றிதழ் எண், குடும்ப வருமான சான்றிதழ் எண், நோகாணல் தேதிக்கு ஒன்றரை ஆண்டுக்கு முன்பான வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, விண்ணப்பதாரரின் தொலைபேசி மற்றும் செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, திட்ட விவரங்கள் ஆகியவற்றைய இணையதளத்தில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். அதே வேளையில், தொலைபேசி, செல்லிடப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி இல்லாதவா்களுக்கு விதி விலக்கு அளிக்கப்படும். 


விண்ணப்பதாரா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறுவதற்கு அறிவிக்கப்பட்ட நாள்களில் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம். மேலும், விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் மட்டும் பதிவு செய்யலாம். இதற்கான விண்ணப்பம் ஒன்றிற்கு பயனாளியிடமிருந்து ரூ.60 கட்டணம் வசூலிக்கப்படும். விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் ஒப்புகை ரசீது வழங்கப்படும்.இதுதொடா்பான கூடுதல் விவரங்ளுக்கு: மாவட்ட மேலாளா், தாட்கோ,அறை எண். 503, மாவட்ட ஆட்சியா் அலுவலம்,பல்லடம் சாலை, திருப்பூா்-641604.தொலைபேசி எண்: 0421-2971112.

Eligible persons can apply through the website for the following economic development projects implemented by TADCO in Tiruppur district:The Thiruppur district Nirvagam issued on Saturday:Applications are invited for beneficiaries of the following projects of Tamil Nadu Adiravidavid Housing and Development University (TADCO). 

In this case, applicants can apply between 18 to 65 years of age and not more than one lakh family members. This includes land acquisition, land development, fast power supply, well construction, entrepreneurship, gasoline, diesel gas retailing, entrepreneurship, self employment program for youth, economic credit grant for self help groups, district administration. Option Fund, Managing DirectorThis should include the full description, photo, location certificate number, caste certificate number, family income certificate number, one and a half year income certificate, family card, Aadhaar card, applicant's telephone and cell phone number, email address and project details. .


At the same time, those who do not have a phone, cell phone number and e-mail address are exempt. Applicants can register online 24 hours a day for receiving applications. Further, applications can be registered only during office hours with the respective District Manager.An application fee of Rs. 60 will be charged from the beneficiary. Acknowledgment Receipt will be issued once the application has been uploaded. For further details: District Manager, Dadco, Room No. 503, District Administration Office, Palladam Road, Tiruppu-641604. Telephone No: 0421-2971112.

No comments:

Post a Comment

Please Comment