5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு விலக்கு; 3 ஆண்டுகளில் இருந்து மேலும் நீட்டிக்க பரிசீலனை 5th, 8th class Public Exam exemption; Review further extension from 3 years - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு விலக்கு; 3 ஆண்டுகளில் இருந்து மேலும் நீட்டிக்க பரிசீலனை 5th, 8th class Public Exam exemption; Review further extension from 3 years

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு விலக்கு; 3 ஆண்டுகளில் இருந்து மேலும் நீட்டிக்க பரிசீலனை 5th, 8th class Public Exam exemption; Review further extension from 3 years 

5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விலக்கை 3 ஆண்டுகளில் இருந்து மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நடப்புக் கல்வியாண்டு (2019-2020) முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 


பள்ளிக் கல்வித்துறையின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு கல்வியாளர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வந்த நிலையில், இதுகுறித்து கடந்த செப்டம்பர் மாதம் விளக்கமளித்த அமைச்சர் செங்கோட்டையன், '5, 8-ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும். 


5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது இந்தியா முழுமைக்கும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டிருக்கின்ற முறை. இந்த பொதுத்தேர்வு முறையிலிருந்து நமது மாநிலத்திற்கு 3 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது' என தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இன்று அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில், பொதுத் தேர்வு விலக்கை மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். 

 அதில், '5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விலக்கை 3 ஆண்டுகளில் இருந்து மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது.பொதுத்தேர்வு குறித்த மக்களின் கருத்துகள், மாணவர்களின் நிலை, மற்ற மாநிலங்கள் இத்தேர்வை பின்பற்றும் போது ஏற்படுகின்ற இடர்பாடுகள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு, விலக்கை நீட்டிக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது' என்று செங்கோட்டையன் பதிவிட்டுள்ளார்.

The Government is considering extending the general election exemption for standard 5th and 8th from three years, said the Minister of School Education, Senkotaiyan.The school education department has announced that general exams will be held for std 5 and 8 from the current academic year (2019-2020). Many Tamil political party leaders have condemned this announcement by the school education department.

Minister Senkottaiyan, who explained last September, “The current practice of selecting classes for std 5 and 8 will continue, as educators have also registered their denunciations for the announcement of the Government of Tamil Nadu. 5th and 8th Class Elections are a system brought by the Central Government to the whole of India. Our state has been exempted from this general election for 3 years. ”At this point, Minister Sengottaiyan posted on his Twitter page that the government is considering extending the general election exemption.The government is considering extending the general election exemption for Grades 5 and 8 from 3 years. 

The government is considering extending the exemption, knowing the public's views on the public exam, the status of the students, and the difficulties that other states may face in pursuing the election, ”Senkotaiyan reported.


No comments:

Post a Comment

Please Comment