இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது promotion - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Saturday, November 16, 2019

இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது promotion

இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு The promotion on the basis of reservation is against the constitution

இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது அரசியல மைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப் பளித்துள்ளது. இதுதொடர்பாக நெடுஞ் சாலைத் துறை பொறியாளர்களான ராஜா, செந்தில்குமார் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். 

அதில், ‘‘தமிழகத்தில் அரசு பணி களுக்கான நியமனத்தில் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்படுகிறது. இதே போல பதவி உயர்விலும் இடஒதுக் கீடு பின்பற்றப்படுகிறது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக் குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதி மன்றம், இடஒதுக்கீடு அடிப்படை யில் பதவி உயர்வு வழங்கக் கூடாது என்றும், பணிமூப்பு அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும் எனவும் கடந்த 2015-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

 இந்நிலையில் தமிழக அரசு கடந்த 2016-ம் ஆண்டு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பணி நிபந்தனைக் கான புதிய விதிகளைக் கொண்டு வந்து அதன்படி பதவி உயர்வுக்கும் இடஒதுக்கீட்டு முறைகளைப் பின்பற்றலாம் என மீண்டும் பழைய நிலைக்கே திரும்பியுள்ளது. இத னால் எங்களின் பதவி உயர்வு பாதிக்கப்படுகிறது. எனவே தமிழக அரசின் இந்த நடவடிக்கை சட்டவிரோதம் என அறிவித்து பணிமூப்பு அடிப்படையில் எங்க ளுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தமிழக அரசு கடந்த 2016-ம் ஆண்டு முதல் தனியாக ஒரு சட்டத்தை இயற்றி இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. அதுபோன்ற நடவடிக்கைக்கு சட்ட அங்கீகாரம் பெறப்படவில்லை. மக்கள் நலன் காக்கும் அரசு ஊழியர்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும். 

இந்த விஷயத்தில் பகுத்தறிவுடன் கூடிய சமநிலையை அரசு பின்பற்ற வேண்டும். மனுதாரர்கள் விஷயத்தில் அரசு நேர்மையுடன் செயல்படுவதாகத் தெரியவில்லை. எனவே மனுதாரர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் 12 வாரங்களுக்குள் உரிய பதவி உயர்வை வழங்க வேண்டும். இடஒதுக்கீடு அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது சட்டவிரோதமானது. அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இவ்வாறு உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Google Translation


The High Court has ruled that granting promotions on the basis of reservation is unconstitutional. Highway engineers Raja and Senthil Kumar filed a petition in this regard.

Caste reservation is practiced in the appointment of government jobs in Tamil Nadu. Similarly, the promotion is followed by a reservation. Litigation proceeded in the High Court against it. The Supreme Court, which heard the cases, ruled in 2015 that it should not be promoted on the basis of reservation and promoted on dismissal basis. 


The Supreme Court dismissed the Tamil Nadu government's ongoing case against it.In 2016, the Tamil Nadu Government has returned to its original position that the Tamil Nadu Government employees could adopt the new rules for the terms and conditions of employment. Because of this our promotion is affected. 

The government of Tamil Nadu therefore declared the move illegal and demanded that we be promoted on a layoff basis.In the order issued by the judges MM Sundaresh and RMT Dekaraman, the Tamil Nadu government said that the state government has been promoting the reservation of the reservation based on the Supreme Court order. Is against the constitution Anatu. 

No such legal action has been obtained. The welfare of public servants should be taken into consideration.The state must adopt a rational balance in this regard. The government does not appear to be acting honestly in the matter of the petitioners. Applicants should therefore be given promotion within 12 weeks of the dismissal. It is illegal to grant promotions to civil servants on the basis of reservation. The Constitution is against the law. Thus the judges mentioned in the order.

No comments:

Post a Comment

Please Comment