New pension scheme; Expert Panel Decision Public Servant, Teacher Expectation புதிய பென்ஷன் திட்டம்; வல்லுனர்குழு முடிவு என்னாச்சு அரசு ஊழியர், ஆசிரியர் எதிர்பார்ப்பு - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

♨Dear New Admins Please add this number 9344118029 or 9629345493 to your WhatsApp groups

LIKE US

Popular Posts

Friday, November 8, 2019

New pension scheme; Expert Panel Decision Public Servant, Teacher Expectation புதிய பென்ஷன் திட்டம்; வல்லுனர்குழு முடிவு என்னாச்சு அரசு ஊழியர், ஆசிரியர் எதிர்பார்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
👍Whats📱Trending🌍Today?👉Click Here
👍Health📱Tips🌍For You👉Click Here

New pension scheme; Expert Panel Decision Public Servant, Teacher Expectation புதிய பென்ஷன் திட்டம்; வல்லுனர்குழு முடிவு என்னாச்சு அரசு ஊழியர், ஆசிரியர் எதிர்பார்ப்பு. 


புதிய பென்ஷன் திட்டம் குறித்து ஆய்வு செய்த வல்லுனர் குழு, அறிக்கையை சமர்ப்பித்து ஓராண்டாகியும், முதல்வர் முடிவு எதுவும் தெரிவிக்காமல் மவுனம் சாதிப்பதால், அரசு ஊழிர்கள் ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.தமிழகத்தில் 1.4.2003 முதல், புதிய பென்ஷன் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த தேதியில் இருந்து பணியில் சேர்ந்தவர்களுக்கு, புதிய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதால், சிரமங்களை சந்திப்பதாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் குமுறுகின்றனர். 


இதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.அறிக்கை தயார்2016ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஆராய ஓய்வு பெற்ற அதிகாரி சாந்தஷீலா நாயர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். இக்குழு 8 முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இறுதியில் ஓய்வு அதிகாரி ஸ்ரீதர் தலைமையிலான குழுவினர், முடிவாக ஓர் அறிக்கையை தயார் செய்து, 2018 நவம்பரில் தமிழக முதல்வர் பழனி சாமியிடம் வழங்கினர்.


அதன்பின் ஓராண்டு முடியும் நிலையிலும், இதுவரை அக்குழுவின் அறிக்கை குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் புதிய பென்ஷன் திட்டம் ரத்தாகுமா என்ற அரசு ஊழியர்களின் கேள்விக்கும் பதில் இல்லை.திண்டுக்கல் ஆசிரியர் ஏங்கல்ஸ் கூறியதாவது: புதிய பென்ஷன் திட்டம் ரத்து குறித்து, 2003க்கு பிறகு சேர்ந்த அரசு ஊழியர், ஆசிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இது குறித்த வல்லுனர் குழு அறிக்கையும் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது வேதனை அடைய செய்கிறது. வல்லுனர்கள் குழுவின் முடிவை விரைந்து வெளியிட வேண்டும். என்றார்.


Google Translation


An expert panel reviewing the new pension scheme has submitted a report and the government is silent with no decision by the chief minister. 

Teachers and civil servants are facing difficulties as a result of the implementation of the new pension scheme. Ready to Prepare the Report When Jayalalithaa was the Chief Minister in 2016, a team headed by retired officer Santasheela Nair formed a committee to explore the feasibility of implementing the old pension scheme. The group has been extended 8 times. 


Eventually, a team headed by retired officer Sridhar finally prepared a report and presented it to Tamil Nadu Chief Minister Palani Sami in November 2018. A year later, no reports have been released. 


There is no expectation of government employees and teachers joining the government after the 2003 pension scheme was canceled. An expert panel report on this has caused pain in the well. Experts should expedite the panel's decision. said.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .