Heavy rains in 11 districts காற்றழுத்த தாழ்வு, வெப்ப சலனத்தால் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல் - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...

♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Saturday, November 16, 2019

Heavy rains in 11 districts காற்றழுத்த தாழ்வு, வெப்ப சலனத்தால் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

👍Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
👍Whats📱Trending🌍Today?👉Click Here
👍Health📱Tips🌍For You👉Click Here

Ventilator, thermal temp Heavy rains in 11 districts Meteorological Center Information.
காற்றழுத்த தாழ்வு, வெப்ப சலனத்தால் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல் 

நிலப்பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கடந்த 20 நாட்களாக குறிப்பிடும்படியாக மழை பெய்யாத நிலையில், திடீ ரென தமிழக கடலோரப் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பெரும் பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. 

 இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கள் கூறியதாவது: தமிழக கடலோரப்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுநிலை, தற்போது நிலப்பகுதியில் நிலவி வருகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங் களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

 திருவள்ளூர் காஞ்சிபுரம், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி, தேனி, ராம நாதபுரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் திருச் செந்தூர், காயல்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 13 செ.மீ, மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Due to the prevailing winds and heatwave conditions, heavy rainfall is expected in 11 districts of Tamil Nadu in the next 24 hours. With no significant rainfall in Tamil Nadu for the past 20 days, heavy rains in Tamil Nadu have caused heavy rains in Tamil Nadu.

 Chennai Meteorological Department official said: "The prevailing wind condition of the Tamil Nadu coastline is presently on the ground. Due to this and the heatwave, light to moderate rains are likely in the coastal districts of Tamil Nadu and in Puducherry and a few places in the next 24 hours.

 Heavy rainfall is expected in 11 districts in Thiruvallur Kanchipuram, Vellore, Coimbatore, Erode, Salem, Nilgiris, Theni, Rama Nadapuram, Tirunelveli and Thoothukudi. The maximum rainfall was recorded at Thiruchendur and Kayalpattinam in Thoothukudi district in the last 24 hours. Thus said the authorities.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .