அரசு பள்ளி மாணவர்களுக்கு நிதிசார்ந்த பயிற்சிக்கு பள்ளிக்கல்வி துறை ஏற்பாடு For government school students Arranging school education for financial training - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Sunday, November 10, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு நிதிசார்ந்த பயிற்சிக்கு பள்ளிக்கல்வி துறை ஏற்பாடு For government school students Arranging school education for financial training

அரசு பள்ளி மாணவர்களுக்கு நிதிசார்ந்த பயிற்சிக்கு பள்ளிக்கல்வி துறை ஏற்பாடு For government school students Arranging school education for financial training 


பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக் கும் அனுப்பிய சுற்றறிக்கை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8, 9, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நிதிசார்ந்த கல்வியறிவு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் இந்த பயிற்சிக்கான பாடத்திட்டத்தை புத்தகமாக வழங்காமல் குறுந்தகடு மூலம் ஆசிரியர்களுக்கு வழங்கி, கணினி வழியில் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
இதனால் மாணவர்களின் புத்தகச் சுமை குறையும். இந்த பாடங்களை நடத்த 8, 9-ம் வகுப்புகளுக்கு சமூக அறிவியல், ஆங்கிலம் பாடவேளைகளையும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொருளியல், வணிகவியல் பாட வேளைகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜனவரிக்குள் பாடங்களை முடித்து தேர்வுகளை நடத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும், இந்தத் திட்டம் தொடர் பாக மாணவர்கள், ஆசிரியர்களின் கருத்துகளை சேகரித்து இயக்குநர கத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Circular sent to all District Primary Education Officers: In the current academic year, the curriculum for this exercise is not given as a booklet but it is decided to provide the students with a CD and to take the lesson to the students via computer.

This will reduce the student book load. For these classes, classes 8 and 9 should be used for social sciences, English courses, and economics and commerce courses for classes 1 and 2. Headmasters should be instructed to complete the exams by January and make the exams. In addition, the program should collect a series of student feedback from the faculty and send it to the director.

No comments:

Post a Comment

Please Comment