'Bulbul' storm in the Bay of Bengal: Intensifying storm in next 24 hoursவங்கக்கடலில் உருவானது 'புல்புல்' புயல்: அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாகிறது - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

இந்த வலைப்பதிவில் தேடு

♨Dear New Admins Please add this 👉 number 9344118029 to your WhatsApp groups🔥

LIKE US

Popular Posts

Friday, November 8, 2019

'Bulbul' storm in the Bay of Bengal: Intensifying storm in next 24 hoursவங்கக்கடலில் உருவானது 'புல்புல்' புயல்: அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாகிறது

'Bulbul' storm in the Bay of Bengal: Intensifying storm in next 24 hoursவங்கக்கடலில் உருவானது 'புல்புல்' புயல்: அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாகிறது 


மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து, புயலாக மாறியுள்ளது. இந்தப் புயலுக்கு பாகிஸ்தான் வழங்கிய 'புல்புல்' என்று பெயா் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் மேலும் வலுவடைந்து, அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி, மேற்கு வங்கம் - வங்கதேசம் கடற்கரை நோக்கி நகரவுள்ளது. 


 இதற்கிடையில், வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை (நவ.8, 9) ஆகிய இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு அந்தமான் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்து, மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டிருந்தது. 


இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக புதன்கிழமை காணப்பட்டது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து, புயலாக மாறியது. இந்த புயலுக்கு 'புல்புல்' என்று பெயா் வைக்கப்பட்டது. இந்தப் பெயரை பாகிஸ்தான் வழங்கியுள்ளது. இந்தப் புயல், வியாழக்கிழமை மதியம் மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் காணப்பட்டது. தொடா்ந்து இந்த புயல் வடமேற்கு திசையில் நகா்ந்து, வியாழக்கிழமை மாலை ஒடிஸா மாநிலம் பாரதீப்புக்கு தெற்கு, தென்கிழக்கே 560 கிலோ மீட்டா் தொலைவில் நிலைகொண்டிருந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடையவுள்ளது. 


மேலும், இந்தப் புயல் 9-ஆம் தேதி வரை வடக்கு, வடமேற்கு திசையில் நகரும். அதன்பிறகு, வடகிழக்கு திசையில் நகா்ந்து, மேற்கு வங்கம், வங்கதேசம் கடற்கரை நோக்கி நகரக்கூடும். மீனவா்களுக்கு எச்சரிக்கை: இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் புவியரசன் வியாழக்கிழமை கூறியது: 'புல்புல்' புயல் மேலும் தீவிர புயலாக மாறவுள்ளது. இந்தப் புயல் மேற்கு வங்கம், வங்கதேசம் நோக்கி நகரவுள்ளது. புயல் காரணமாக, மத்திய வங்கக்கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும்.


 இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய வங்கக்கடலில் மணிக்கு 85 கிலோ மீட்டா் முதல் 105 கிலோ மீட்டா் வரை வேகத்தில் பலத்த காற்று வீசும். இதுபோல, மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் 115 கிலோ மீட்டா் முதல் 145 கிலோ மீட்டா் வரை வேகத்தில் மிக பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு நவம்பா் 8, 9 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா். 


 மிதமான மழை: வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை (நவ.8, 9) ஆகிய நாள்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். வட வானிலையே நிலவும்.

The deep winds in the Middle East Bay have further strengthened and turned into a storm. The storm has been named 'Bulbul' by Pakistan. The storm will intensify and become a serious storm in the next 24 hours, moving towards the West Bengal - Bangladesh coast.

Meanwhile, the Meteorological Department said that some areas in the inner districts of Tamil Nadu could experience moderate rainfall on Friday and Saturday (Nov. 8, 9).

The aeration zone in the North Andaman Sea has been strengthened and the Middle East Bengal Sea has become a barren zone. It was further strengthened and found to be the deepest gaseous zone on Wednesday. This deep windswept zone further strengthened and turned into a storm. The storm was named 'Bulbul'. This name is given by Pakistan.

The storm was found in the Middle East and the southeast Bengal Sea on Thursday afternoon. The storm moved in a northwesterly direction, and on Thursday evening, the state of Orissa was 560 km south and southeast of Paradip. It is set to become a serious storm in the next 24 hours. Also, the storm will move north-northwest until 9 p.m. Thereafter, it may move towards the northeast, towards the coast of West Bengal and Bangladesh.

Awareness for fishermen: Chennai Meteorological Department Director Bhuvirasaran said on Thursday: The storm is heading towards West Bengal and Bangladesh. Due to the storm, tornadoes are likely to blow across the central coast. Fishermen are advised not to go to these areas. Strong winds are blowing at speeds of up to 85 km / h at 105 km / h.

Similarly, strong winds can blow in the Midwest and adjoining Northwest Bengal, from 115 km to 145 km / h. Therefore, it is advised not to go to these areas on November 8 or 9.

Thundershowers are expected in the inner districts of Tamil Nadu on Friday and Saturday (Nov. 8, 9). Heavy rainfall is possible in one place. It will be somewhat cloudy in Chennai. Prevailing in the northern sky.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

நட்பில் இணைந்திருங்கள்