சர்வதேச திறன் தகுதி போட்டி: விண்ணப்பிக்க அழைப்பு - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

சர்வதேச திறன் தகுதி போட்டி: விண்ணப்பிக்க அழைப்பு

சர்வதேச திறன் தகுதி போட்டி: விண்ணப்பிக்க அழைப்பு 


தர்மபுரி மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: சீனாவில், 2021 செப்.,ல் சர்வதேச திறன் போட்டிகள் நடக்கவுள்ளன. மாவட்ட அளவிலான தகுதி போட்டி தர்மபுரியில் நடக்கிறது. ஆறு துறைகளில் உள்ள, 47 தொழிற்பிரிவுகளில் தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக, போட்டி நடக்கிறது. ஐந்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை கல்வித்தகுதி பெற்றவர்கள், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், குறுகியகால தொழிற்பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். வரும், 25க்குள் https://worldskillsindia.co.in/worldskill/world/ என்ற இணைய தளத்தில் சென்று, தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரம் பெற, 04175 298297 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment