பள்ளி, கல்லூரிகளில் இன்று ‘தமிழ்நாடு நாள்’ தினத்தை கொண்டாட அரசு உத்தரவு  - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Friday, November 1, 2019

பள்ளி, கல்லூரிகளில் இன்று ‘தமிழ்நாடு நாள்’ தினத்தை கொண்டாட அரசு உத்தரவு 

பள்ளி, கல்லூரிகளில் இன்று ‘தமிழ்நாடு நாள்’ தினத்தை கொண்டாட அரசு உத்தரவு


 பள்ளி, கல்லூரிகளில் ‘தமிழ்நாடு நாள்’ தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்க முடிவானது. அதன்படி 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி சென்னை மாகாணத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா பிரிந்து தனி மாநிலங்களாக அறிவிக்கப்பட்டன. 


அந்த நாளை தமிழகம் உருவான தினமாக கொண்டாட தமிழறிஞர்கள் தொடர் கோரிக்கை வைத்தனர். அதையேற்று நடப்பு ஆண்டு முதல் நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு நாளாகக் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் ‘தமிழ்நாடு நாள்' இன்று (நவ.1) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. 


இதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழ் தொன்மை குறித்த தலைப்பில் பேச்சுப் போட்டி உட்பட சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அவ்வாறு நடத்தப்படும் நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 


இதேபோல், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் தமிழகம் உருவான வரலாறு தொடர்பான கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment