வரலாற்றில் இன்று 09.11.2019 - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨இந்த வலைதளத்தில் இடம்பெறும் செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் Share செய்யுங்கள்....

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

♨Dear New Admins Please add this number 9344118029 or 9629345493 to your WhatsApp groups

LIKE US

Popular Posts

Saturday, November 9, 2019

வரலாற்றில் இன்று 09.11.2019

*🔵நாடும் ⚖ நடப்பும்*

*🇵🇾 வரலாற்றில் இன்று 🇵🇾*


         _*🌹சனிக்கிழமை 🌹*_

*✍பதிவு நாள்: (09.11.2019*



*கிரிகோரியன் ஆண்டின் 313 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 314 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 52 நாட்கள் உள்ளன.*

*🔵நிகழ்வுகள்*

🖌1793 – கிறிஸ்தவ மதகுரு வில்லியம் கேரி கல்கத்தா வந்து சேர்ந்தார்.

🖌1799 – பிரெஞ்சுப் புரட்சி முடிவுக்கு வந்தது. நெப்போலியன் பொனபார்ட் பிரான்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.

🖌1872 – மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் ந்கரில் களஞ்சிய சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ பரவியதில் பொஸ்டனின் பெரும் பக்தி அழிந்தது. 776 கட்டடங்கள் அழிந்து 20 பேர் கொல்லப்பட்டனர்.

🖌1887 – ஐக்கிய அமெரிக்கா ஹவாயின் பேர்ள் துறைமுகத்தின் உரிமையைப் பெற்றது.

🖌1888 – கிழிப்பர் ஜேக் மேரி ஜேன் கெலியைக் கொன்றான். இதுவே அவனது கடைசிக் கொலையாகும்.

🖌1913 – மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத் தண்டனையடைந்தார்.

🖌1921 – அல்பேர்ட் ஐன்ஸ்டீன் ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

🖌1937 – ஜப்பானியப் படைகள் சீனாவின் ஷங்காய் நகரைக் கைப்பற்றினர்.

🖌1938 – நாசி இட்லரின் யூதப் பகைமைக் கொள்கையின் ஒரு பகுதியாக செருமனியில் கிறிஸ்டல் இரவு நிகழ்வு இடம்பெற்றது. 90 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 25,000 பேர் கைது செய்யப்பட்டு நாசி வதை முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

🖌1953 – கம்போடியா, பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

🖌1963 – ஜப்பானில் மீக் என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 458 பேர் கொல்லப்பட்டனர்.

🖌1963- ஜப்பான் யோகோஹாமா என்ற இடத்தில் மூன்று தொடருந்துகள் மோதியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.

🖌1967 – நாசா நிறுவனம் கேப் கென்னடி தளத்தில் இருந்து ஆளில்லா அப்பல்லோ 4 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.

🖌1985 – சதுரங்க உலகக்கிண்ணப் போட்டியில் காரி கஸ்பரோவ் அனத்தோலி கார்ப்பொவைத் தோற்கடித்து உலகின் முதலாவது வயது குறைந்த சதுரங்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

🖌1989 – பனிப்போர்: கம்யூனிசக் கிழக்கு ஜேர்மனி பேர்லின் சுவரைத் திறந்து விட்டதில் பலர் மேற்கு ஜேர்மனிக்குள் செல்ல ஆரம்பித்தனர்.

🖌1990 – நேபாளத்தில் புதிய மக்களாட்சி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

🖌1994 – டார்ம்ஸ்டாட்டியம் (Darmstadtium) என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

🖌2000 – உத்தராஞ்சல் மாநிலம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.

🖌2005 – வீனஸ் எக்ஸ்பிரஸ் என்ற ஐரோப்பாவின் விண்கலம் கசக்ஸ்தானில் இருந்து ஏவப்பட்டது.

🖌2005 – ஜோர்தானின் அம்மான் நகரில் மூன்று விடுதிகளில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 56 பேர் கொல்லப்பட்டனர்.

*🔵பிறப்புகள்*

🖌1877 – முகமது இக்பால், பாக்கித்தானிய மெய்யியலாளர், கவிஞர், அரசியல்வாதி (இ. 1938)

🖌1897 – ரொனால்ட் ஜார்ஜ் விரேஃபோர்ட் நோர்ரிஷ், ஆங்கிலேய வேதியியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1978)

🖌1934 – கார்ல் சேகன், அமெரிக்க வானியலாளர், எழுத்தாளர் (இ. 1996)

🖌1952 – ஜாக் சோஸ்டாக், உயிரியலாளர், நோபல் பரிசு பெற்றவர்

🖌1959 – ஈ. காயத்ரி, வீணைக் கலைஞர்

*🔵இறப்புகள்*

🖌1918 – கியோம் அப்போலினேர், பிரெஞ்சுக் கவிஞர் (பி. 1880)

🖌1953 – அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ், சவூதி அரேபிய மன்னர் (பி. 1880)

🖌1962 – தோண்டோ கேசவ் கார்வே, இந்திய செயற்திறனாளர் (பி. 1858)

🖌1970 – சார்லஸ் டி கோல், பிரெஞ்சுத் தளபதி, அரசியல்வாதி (பி. 1890)

🖌1988 – தேங்காய் சீனிவாசன், தமிழ் நாடக, திரைப்பட நடிகர், (பி.1937)

🖌1992 – தா. சிவசிதம்பரம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1926)

🖌2004 – ஸ்டீக் லார்சன், சுவீடிய ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1954)

🖌2005 – கே. ஆர். நாராயணன், இந்தியக் குடியரசுத் தலைவர், (பி. 1921) .

🖌2006 – வல்லிக்கண்ணன், தமிழ் எழுத்தாளர் (பி. 1920)

*🔵சிறப்பு தினம்*

🖌கம்போடியா – விடுதலை தினம் (1953)

➖➖➖➖➖➖➖➖➖➖

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

நட்பில் இணைந்திருங்கள்