கல்வி செய்திகள் சுருக்கமாக (09/11/19/) பாகம் - 1 - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Saturday, November 9, 2019

கல்வி செய்திகள் சுருக்கமாக (09/11/19/) பாகம் - 1

*📢 Today's KALVINEWS📢*


*2050 ஐப்பசி 23 ♝ &   09•11•2019*


🛡பள்ளிக்கல்வி துறையில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு. அடுத்த வாரம் முழுவதும் மேல்நிலை,உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகின்றது.


🛡வரும் 2020-21ஆம் கல்வி ஆண்டில் இருந்து 8-ஆம் வகுப்பிற்கு மூன்று பருவ பாடப் புத்தகங்களை ஒன்றிணைத்து ஒரே பாட நூலாக வழங்க அரசாணை வெளியீடு. அரசாணை எண் 187 நாள் 23.10.19


🛡பள்ளிக்கல்வி 2019-20-ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் நீதிமன்ற தீர்ப்பாணைகளின் அடிப்படையில் பொது மாறுதலில் கலந்துக்கொள்ள ஆணை பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் பதிவுசெய்தல் அறிவுரைகள் வழங்குதல் சார்பாக பள்ளிக்கல்வி  இயக்குநரின்  செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.


🛡 4 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


🛡புதிய பென்ஷன் திட்டம்: வல்லுநர்குழு முடிவு என்னாச்சு??? அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு - நாளிதழ் செய்தி 


🛡பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த மகளிர் ஊழியருக்கு “Safe Surfing” ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்துதல் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
பெண் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி - கட்டணமாக ஆசிரியர்கள் ரூ.2200/- செலுத்த வேண்டும் 


🛡தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விலக்கு 3 ஆண்டுகளில் இருந்து மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது என பள்ளிக்கல்வி துறை அமைச்சா்  தெரிவித்துள்ளாா்.


🛡மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடைபெறவுள்ளது ( இறுதி செய்யப்பட்ட முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு) 


🛡புதிய தொழில்நுட்பம்   திரைப்பட வீழ்த்தி (ஓவா் ஹெட் புரொஜெக்டா்) கண்டுபிடிப்பிற்கு  பரிசு பெற்ற பழவூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவரை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் பாராட்டினாா் 


🛡அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவது ஏன்?ஆய்வு நடத்த தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 


🛡ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு பாஸ் மதிப்பெண் போட்ட ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு அதிரடியாக ரத்து

No comments:

Post a Comment

Please Comment