பாதவலி, #மூட்டுவலியை # நீக்கும்_பயிற்சிகள் - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Thursday, November 7, 2019

பாதவலி, #மூட்டுவலியை # நீக்கும்_பயிற்சிகள்

பாதவலி, #மூட்டுவலியை # நீக்கும்_பயிற்சிகள்

கணுக்கால் வலி,
பாத வலி,
மூட்டு வலி,
இடுப்பு வலி


போன்றவைகளை பெரும்பாலானவர்கள் அனுபவிக்கிறார்கள். ஒருசில பயிற்சிகளை செய்து வருவதன் மூலம் வலிகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

 உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் ஆறில் ஒருவர் நாள்பட்ட வலியால் அவதிப்படுகிறார்கள். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 18 சதவீதம் பேர் மூட்டுவலி, பாத வலி போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. அதற்கு வாழ்க்கைமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்தான் காரணம். நிறைய பேர் வலியை குறைக்க வலி நிவாரணிகளை நாடுகிறார்கள்.

#குதிகால்_பயிற்சி:

நாற்காலியின் பின்பகுதியில் கால்களை ஊன்றி நிற்க வேண்டும். கைகளை நாற்காலியின் மீது வைத்து ஒரு காலை மேலே தூக்கி கால்விரல்களின் துணையுடன் நிற்க வேண்டும். சில விநாடிகளில் காலின் பின்பகுதியை மீண்டும் தரையில் வைக்க வேண்டும். ஒவ்வொரு காலையும் கொண்டு இந்த பயிற்சியை 10-15 முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சி முழங்கால்களைச் சுற்றியுள்ள கணுக்கால் மற்றும் தசைகளை வலுப்படுத்த உதவும்.

#விரல்களால்_நடப்பது:

எப்போது வேண்டுமானாலும் செய்யக்கூடிய எளிய பயிற்சி இது. கால் விரல்களை மட்டும் தரையில் அழுத்தி மெதுவாக நடக்க வேண்டும். பின்னர் வேகத்தை சற்று அதிகரிக்க வேண்டும். ஆரம்பத்தில் 5 நிமிடங்கள் இந்த நடை பயிற்சியை மேற்கொள்ளலாம். பின்னர் படிப்படியாக நேரத்தை அதிகப்படுத்தலாம். இது கணுக்கால்களுக்கு அழுத்தம் கொடுத்து அதனை வலுப்படுத்த உதவும்.

#நடைப்_பயிற்சி

கால் விரல்களை நன்றாக மடக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் விரல்களுக்கு இடையில் ஏதாவது பொருளை செருகி வைத்து அது கீழே விழாத அளவுக்கு சிறிது நேரம் நடக்க வேண்டும். இந்த பயிற்சிக்கு கால்விரல்களையும், பாதங்களையும் பயன்படுத்த வேண்டும்.

#பந்துமூலம்பயிற்சி:

கால்களின் கீழ் டென்னிஸ் பந்தை வைத்து இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். பந்தின் மீது கால் பாதத்தை வைத்து முன்னும், பின்னுமாக மெதுவாக நகர்த்தி மசாஜ் செய்ய வேண்டும்.

#பாத_மசாஜ்:

ஒரு கால் விரல்களுக்கு இடையே மறு காலின் கட்டை விரலை வைத்து மென்மையாக அழுத்தி மசாஜ் கொடுங்கள். 10 முதல் 15 நிமிடங்கள் இந்த மசாஜை மேற்கொள்ளலாம்.

#கால்விரல்பயிற்சி:

நாற்காலியில் அமர்ந்து கொண்டு கால் விரல்களை வட்ட வடிவத்தில் மெதுவாக சுழற்ற வேண்டும். முன்னும் பின்னுமாக கால்விரல்களை 10 தடவை சுழற்றி பயிற்சி மேற்கொள்ள வேண்டும். கணுக்கால்கள் பலவீனமாக இருப்பவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்

Ankle pain
Foot pain
Joint Pain,
Hip Pain
Such things are enjoyed by most. Doing a few exercises can relieve the pain.

 According to the World Health Organization, one in six people in India suffer from chronic pain. About 18 percent of the population suffers from arthritis and foot pain. This number is increasing day by day. Lifestyle changes are the reason. Many people seek pain relievers to reduce pain.

# Kutikalpayirci:

Stand with feet on the back of the chair. Put your hands on the chair and lift one leg up and stand with your toes supported. In a few seconds the back of the foot should be placed back on the ground. Do this exercise 10-15 times with each leg. This training will help strengthen the ankle and muscle around the knee.

# Viralkalalnatappatu:

This is a simple exercise that can be done at any time. Press the toes to the floor and walk slowly. Then the speed should be slightly increased. This exercise can be done for 5 minutes at the beginning. Then gradually increase the time. This will help to strengthen the ankles.

# Nataippayirci

The toes should be folded well. Then insert any material between the fingers and walk for a while so that it does not fall down. Toes and feet should be used for this exercise.

# Pantumulampayirci:

You can do this exercise with the tennis ball under your feet. Keep the foot on the ball and gently massage it back and forth.

# Patamacaj:

Massage the massage gently with the thumb of the other foot between the toes. This massage can be done for 10 to 15 minutes.

# Kalviralpayirci:

Sit in a chair and gently rotate the toes into a circular shape. Practice by rotating the toes back and forth 10 times. People who have ankle weakness may find relief by doing this exercise regularly

No comments:

Post a Comment

Please Comment