வரலாற்றில் இன்று - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

♨Dear New Admins Please add this 👉 number 9344118029 to your WhatsApp groups🔥

LIKE US

Popular Posts

Saturday, November 2, 2019

வரலாற்றில் இன்று

*🔵நாடும் ⚖ நடப்பும்*

*🇪🇬 வரலாற்றில் இன்று 🇪🇬*


         _*🌹சனிக்கிழமை 🌹*_

 *✍பதிவு நாள்: 02.11.2019*

*கிரிகோரியன் ஆண்டின் 306 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 307 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 59 நாட்கள் உள்ளன.*

*🔵நிகழ்வுகள்*

🖌1570 – வட கடலில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக ஒல்லாந்தில் 1,000 பேர் வரையில் இறந்தனர்.

🖌1834 – முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரீசியஸ் சென்றனர்.

🖌1868 – நியூசிலாந்து சீர் நேரத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது.

🖌1889 – வடக்கு மற்றும் தெற்கு டகோட்டா ஐக்கிய அமெரிக்காவின் 39வது, 40வது மாநிலங்களாக முறையே இணைந்தன.

🖌1899 – தென்னாபிரிக்காவில் போவர்கள் பிரித்தானியர்கள் வசம் இருந்த லேடிஸ்மித் பகுதியை 188 நாட்கள் பிடித்து வைத்திருந்தனர்.

🖌1914 – ரஷ்யா ஓட்டோமான் பேரரசு மீது போரை அறிவித்தது.

🖌1917 – பிரித்தானியாவின் வெளிநாட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பான செயலாளராக இருந்த ஆதர் பெல்ஃபர் வெளியிட்ட பிரகடனத்தில் யூதர்களுக்கு பாலஸ்தீனத்தில் ஒரு தேசியத் தாயகம்   ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை இங்கிலாந்து அரசு ஆதரிக்கிறது எனக் கூறப்பட்டது.

🖌1930 – ஹைலி செலாசி எதியோப்பியாவின் பேரரசன் ஆனான்.

🖌1936 – இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி ரோம்-பேர்லின் அச்சு என்ற அச்சு அணியை அறிவித்தான்.

🖌1936 – பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்தது.

🖌1936 – கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது.

🖌1953 – பாகிஸ்தான், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது.

🖌1963 – தெற்கு வியட்நாம் அதிபர் நியோ டின் டியெம் Ngo Dinh Diem இராணுவப் புரட்சியை அடுத்து கொலை செய்யப்பட்டார்.

🖌1974 – தென் கொரியத் தலைநகர் சியோலில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர்.

🖌2000 – பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக விண்வெளி வீரர்கள் சென்றடைந்தனர்.

🖌2006 – ஈழப்போர்: கிளிநொச்சி வைத்தியசாலை சுற்றவுள்ள பகுதிகளில் இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

🖌2007 – இலங்கை வான்படையின் வான்குண்டுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

*🔵பிறப்புகள்*

🖌1795 – ஜேம்ஸ் போக், ஐக்கிய அமெரிக்காவின் 11வது அரசுத் தலைவர் (இ. 1849)

🖌1815 – ஜார்ஜ் பூல், ஆங்கிலேயக் கணிதவியலாளர், (இ. 1864).

🖌1965 – ஷாருக்கான், இந்தி நடிகர்

*🔵இறப்புகள்*

🖌1903 – பரிதிமாற் கலைஞர் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகள், தமிழறிஞர் (பி. 1870).

🖌1917 – ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் (பி. 1858).

🖌1950 – ஜோர்ஜ் பேர்னாட் ஷா, ஐரிஷ் எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவரும் (பி. 1856).

🖌1966 – பீட்டர் டெபாய், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1884)

🖌1978 – ஏ. பெரியதம்பிப்பிள்ளை, மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழறிஞர் (பி. 1899)

🖌2007 – சு. ப. தமிழ்ச்செல்வன், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் (பி. 1967)

*🔵சிறப்பு தினம்*

🖌மொரீசியஸ் – இந்தியர்கள் வருகை தினம் (1834)

🖌கல்லறை திருநாள்

➖➖➖➖➖➖➖➖➖➖

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

இந்த வலைப்பதிவில் தேடு:

LIKE OUR FACEBOOK PAGE

நட்பில் இணைந்திருங்கள்