உடல் எடையை எந்த உணவுகள் அதிகரிக்க செய்யும்... அறிந்து கொள்ளுங்கள்!!! - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Friday, November 8, 2019

உடல் எடையை எந்த உணவுகள் அதிகரிக்க செய்யும்... அறிந்து கொள்ளுங்கள்!!!

உடல் எடையை எந்த உணவுகள் அதிகரிக்க செய்யும்... அறிந்து கொள்ளுங்கள்!!! உணவுமுறையும், சில வகையான உணவுகளும் உங்களின் உடல் எடையை அதிகரிக்கும். எந்த உணவுகள் உடல் எடையை அதிகரிக்கும் என்று அறிந்து கொள்ளுங்கள். உப்பு அதிகம் உள்ள உணவுகள் உடல் எடையை அதிகரிக்கும். கலவை சாதம், வற்றல், வடகம், முறுக்கு, சிப்ஸ், சாஸ், கெட்சப், ஊறுகாய், தொக்கு, கருவாடு, காய்ந்த நார்த்தங்காய், நூடுல்ஸ், சூப் மிக்ஸ், சாலட் உள்ளிட்டவை அதிக உப்புச்சத்து கொண்டவை. 

 அதிகப்படியான சோடியம், உடலின் நீர்ச்சத்தைத் தேக்கிவைத்து, எடையை அதிகரித்துக் காட்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்கா விட்டாலும், நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடாவிட்டாலும் வயிறு கனத்து உப்புசமும் மலச்சிக்கலும் ஏற்படும். குடலைச் சுத்தப்படுத்தி, கழிவுகளை அவ்வப்போது வெளியேற்ற வேண்டியது ஆரோக்கியத்துக்கு அடிப்படை. உங்கள் உணவில் முழு தானியங்கள், நார்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள் அவசியம் இடம்பெற வேண்டும். 


 ஆளிவிதை பவுடர், கோதுமைத் தவிடு, ஓட்ஸ் தவிடு போன்றவை எக்ஸ்ட்ரா நார்ச்சத்துக்கு உதவும். அரிசி, கிழங்கு வகை, சுண்டல் போன்று கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகள் ஆற்றலுடன், நீர்ச்சத்தையும் சேமித்துவைக்கக் கூடியவை. 

சேமித்து வைக்கப்படுகிற கார்போஹைட்ரேட் 'கிளைகோஜென்' எனப்படுகிறது. ஒவ்வொரு கிராம் கார்போஹைட்ரேட்டுடன் 3 கிராம் நீர்ச்சத்தும் சேமித்து வைக்கப்படும். இதுவும் எடையை அதிகரித்துக் காட்டும். ஒவ்வொரு முறையும் ஒரே நேரத்தில் எடையைச் சரிபார்க்க வேண்டும். காலை முதல் இரவு வரை எடையில் மாறுதல்கள் இருக்கும். ஹார்மோன்களும் உணவுகளும் எடையை பாதிக்கலாம். 


 அடுத்தமுறை எடை பார்க்கும்போது நேரத்தையும், அணிந்திருக்கும் உடையையும் கவனியுங்கள். ட்ராக் பேன்ட், டி-ஷர்ட் மாதிரியான கனமில்லாத உடைகளை அணிந்து எடை பார்ப்பது சிறந்தது. மனநல பிரச்சினைகள், குழந்தையின்மை போன்றவற்றுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளாலும் எடை அதிகரிக்கலாம். கடுமையான ஒவ்வாமை காரணமாக வயிற்று உப்புசமும், கனத்த உணர்வும் ஏற்படும். இதனாலும் எடை கூடும்.

Dieting and certain types of foods will increase your body weight. Know which foods will increase weight gain.


Foods that are high in salt will help you gain weight. The salad, salad, ketchup, pickles, chickpeas, sauces, ketchup, pickles, chickpeas, dried fiber, noodles, soup mix, salad, etc. are highly salty.


Excessive sodium helps the body to hydrate and increase weight. Drinking enough water and not consuming fiber can cause stomach upset and constipation. Cleaning the gut and disposing of the waste periodically is fundamental to health. Your diet should include whole grains, fiber and vegetables.


Flax powder, wheat bran, oatmeal bran can help with extra fiber. Foods rich in carbohydrates, such as rice, tuber, and chickpeas are energy-efficient and can store water. The stored carbohydrate is called 'glycogen'.


Each gram of carbohydrate contains 3 grams of water. This, too, is gaining weight. Weight should be checked at the same time each time. Weights vary from morning to night. Hormones and diets can affect weight.


The next time you look at the weight, consider the time and the wear. Track pants, t-shirts are ideal for weight-wearing. Drugs that are taken for mental health problems, such as childbirth can also increase weight.


Severe allergies can cause abdominal bloating and heavy feeling. Weight gain too.

No comments:

Post a Comment

Please Comment