வரலாற்றில் இன்று 30/11/2019 - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

♨Dear New Admins Please add this number 9344118029 or 9629345493 to your WhatsApp groups

LIKE US

Popular Posts

Saturday, November 30, 2019

வரலாற்றில் இன்று 30/11/2019

👍Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
👍Whats📱Trending🌍Today?👉Click Here
👍Health📱Tips🌍For You👉Click Here

*🔵நாடும் ⚖ நடப்பும்*

*🇵🇾வரலாற்றில் இன்று 🇵🇾*


         _*🌹சனிக்கிழமை 🌹*_

*✍🏼பதிவு நாள்: 30-11-2019*

*கிரிகோரியன் ஆண்டின் 334 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 335 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 31 நாட்கள் உள்ளன.*

*🔵நிகழ்வுகள்*

🖌977 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் ஒட்டோ பாரிசு மீதான முற்றுகையை நிறுத்தி, பின்வாங்கினார்.

🖌1700 – சுவீடனின் பன்னிரண்டாம் சார்லசு தலைமையில் 8.500 இராணுவத்தினர் எஸ்தோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் உருசியப் படைகளை வென்றனர்.

🖌1718 – நோர்வேயின் பிரெட்ரிக்ஸ்டன் கோட்டை முற்றுகையின் போது சுவீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்லசு இறந்தார்.

🖌1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பாரிசு உடன்படிக்கை: அமெரிக்காவிற்கும் மற்றும் பெரிய பிரித்தானியாவுக்கும் இடையே ஆரம்ப அமைதி உடன்பாடு பாரிசில் கையெழுத்திடப்பட்டது.

🖌1786 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் லியோப்பால்டின் தலைமையிலான டசுக்கனி மரணதண்டனையை இல்லாதொழித்த முதலாவது நாடு என்ற பெருமையைப் பெற்றது.

🖌1803 – எசுப்பானிய அமெரிக்கா, மற்றும் பிலிப்பீன்சில் பெரியம்மைக்கு எதிரான தடுப்பூசி இடுவதற்கான மூன்றாண்டுத் திட்டத்துக்கான பயணம் பால்மீசு என்ற மருத்துவர் தலைமையில் எசுப்பானியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.

🖌1803 – லூசியானா வாங்கல்: எசுப்பானியா லூசியானாவை பிரான்சுக்கு அதிகாரபூர்வமாகக் கையளித்தது. 20 நாட்களின் பின்னர் பிரான்சு இப்பிரதேசத்தை ஐக்கிய அமெரிக்காவுக்கு விற்றது.

🖌1806 – நெப்போலியனின் படைகள் போலந்து தலைநகர் வார்சாவைக் கைப்பற்றின.

🖌1853 – கிரிமியப் போர்: உருசியப் பேரரசின் கடற்படை வடக்கு துருக்கியில் உள்ள சினோப் என்ற இடத்தில் உதுமானியரின் படைகளைத் தோற்கடித்தன.

🖌1872 – முதலாவது பன்னாட்டுக் காற்பந்துப் போட்டி கிளாஸ்கோவில் இசுக்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இடம்பெற்றது.

🖌1908 – பென்சில்வேனியாவில் மரியான்னா என்ற இடத்தில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 154 பேர் கொல்லப்பட்டனர்.

🖌1917 – முதலாம் உலகப் போர்: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர். ஐயாத்துரை என்ற லான்ஸ் கோப்ரல் போரில் ஈடுபட்டு இறந்தார்.[1]

🖌1936 – இலண்டனில் பளிங்கு அரண்மனை தீப்பற்றி எரிந்து அழிந்தது.

🖌1939 – பனிக்காலப் போர்: சோவியத் படைகள் பின்லாந்தை முற்றுகையிட்டு எல்சிங்கி மீது குண்டுகளை வீசீன.

🖌1947 – பலத்தீன் உள்நாட்டுப் போர் ஆரம்பம். இது இசுரேல் என்ற நாட்டை உருவாக்க வழி வகுத்தது.

🖌1954 – அமெரிக்காவில் அலபாமா மாநிலத்தில் சிலக்கோகா என்ற இடத்தில் விண்வீழ்கல் ஒன்று வீடு ஒன்றில் வீழ்ந்ததில் ஒரு பெண் கொல்லப்பட்டார்.

🖌1962 – பர்மாவைச் சேர்ந்த யூ தாண்ட் ஐக்கிய நாடுகள் சபையின் 3வது பொதுச் செயலராகத் தெரிவானார்.

🖌1966 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து பார்படோசு விடுதலை பெற்றது.

🖌1967 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து தெற்கு யேமன் விடுதலை பெற்றது.

🖌1967 – சுல்பிகார் அலி பூட்டோ பாக்கித்தான் மக்கள் கட்சியை ஆரம்பித்தார்.

🖌1971 – ஈரான் ஐக்கிய அரபு அமீரகத்தின் டன்பு என்ற இரண்டு தீவுகளைக் கைப்பற்றியது.

🖌1981 – பனிப்போர்: ஜெனீவாவில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் பிரதிநிதிகள் ஐரோப்பாவில் நிலைகொண்டுள்ள நடுத்தர அணுவாயுத ஏவுகணைகளைக் குறைக்க பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர்.

🖌1995 – அமெரிக்க அரசுத்தலைவர் பில் கிளின்டன் வட அயர்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு வட அயர்லாந்து அமைதிப் பேச்சுக்களுக்கு ஆதரவாக உரையாற்றி, தீவிரவாதிகளை அவர் "நேற்றைய மனிதர்" எனக் கூறினார்.

🖌1995 – வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது.

🖌2000 – நாசா தனது 101-வது விண்ணோடத் திட்டத்தை ஆரம்பித்தது.

🖌2012 – கொங்கோ குடியரசு, பிராசவில்லி நகரில் சரக்கு வானூர்தி ஒன்று நகரக் குடியிருப்புகளின் மீது வீழ்ந்ததில் 32 பேர் உயிரிழந்தனர்.

*🔵பிறப்புகள்*

🖌1508 – ஆன்ட்ரே பல்லாடியோ, இத்தாலியக் கட்டிடக் கலைஞர் (இ. 1580)

🖌1667 – ஜோனதன் ஸ்விப்ட், அயர்லாந்து எழுத்தாளர் (இ. 1745)

🖌1761 – சிமித்சன் டெனண்ட், ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 1815)

🖌1825 – வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ, பிரான்சிய ஓவியர் (இ. 1905)

🖌1835 – மார்க் டுவெய்ன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1910)

🖌1858 – ஜகதீஷ் சந்திர போஸ், இந்திய இயற்பியலாளர் (இ. 1937)

🖌1869 – நில்சு குஸ்டாப் டேலன், நோபல் பரிசு பெற்ற சுவீடன் இயற்பியலாலர் (இ. 1937)

🖌1874 – வின்ஸ்டன் சர்ச்சில், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1965)

🖌1888 – கோவைக்கிழார், தமிழகத் தமிழறிஞர், வழக்குரைஞர் (இ. 1969)

🖌1902 – திருக்கண்ணபுரம் விஜயராகவன், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1955)

🖌1904 – ச. து. சுப்பிரமணிய யோகி, தமிழகத் தமிழறிஞர், கவிஞர் (இ. 1963)

🖌1923 – வி. என். ஜானகி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, தமிழ்நாட்டின் 5வது முதலமைச்சர் (இ. 1996)

🖌1931 – ரூமிலா தாப்பர், இந்திய வரலாற்றியலாளர்

🖌1943 – டெரன்சு மாலிக், அமெரிக்க இயக்குநர்

🖌1945 – வாணி ஜெயராம், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி

🖌1947 – மோசசு நாகமுத்து, கயானா அரசியல்வாதி, எழுத்தாளர்

🖌1948 – கே. ஆர். விஜயா இந்திய திரைப்பட நடிகை

🖌1965 – பென் ஸ்டில்லர், அமெரிக்கநடிகர்

🖌1976 – மார்த்தா பர்கே, இத்தாலிய வானியலாளர்

🖌1982 – எலிஷா கத்பெர்ட், கனடிய நடிகை

🖌1985 – கலே கியூகோ, அமெரிக்க நடிகை

🖌1988 – பிலிப் ஹியூஸ், ஆத்திரேலியத் துடுப்பாளர் (இ. 2014)

🖌1990 – மாக்னசு கார்ல்சன், நோர்வே சதுரங்க வீரர்

*🔵இறப்புகள்*

🖌1805 – பழசி இராசா, கோட்டயம்-மலபார் அரசர் (பி. 1753)

🖌1830 – யோகான் தோபியாசு மேயர், செருமானிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1752)

🖌1900 – ஆஸ்கார் வைல்டு, ஐரிய எழுத்தாளர் (பி. 1854)

🖌1930 – மேரி ஹாரிசு ஜோன்சு, அமெரிக்க தொழிலாளர் செயற்பாட்டாளர் (பி. 1837)

🖌1988 – எம். கே. றொக்சாமி, இலங்கை இசைக்கலைஞர், திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1932)

🖌1990 – டி. ஆர். ராமச்சந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1917)

🖌1992 – மீனாம்பாள் சிவராஜ், தமிழக சமூகப் போராளி, பெண்ணியவாதி (பி. 1904)

🖌2012 – ஐ. கே. குஜரால், இந்தியாவின் 12வது பிரதமர் (பி. 1919)

🖌2013 – ரகுராம், திரைப்பட நடன இயக்குநர், நடிகர் (பி. 1948)

🖌2013 – பால் வாக்கர், அமெரிக்க நடிகர் (பி. 1973)

🖌2014 – ஜார்பம் காம்லின், இந்திய அரசியல்வாதி (பி. 1961)

🖌2018 – ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ், அமெரிக்காவின் 41-வது அரசுத்தலைவர் (பி. 1924)

*🔵சிறப்பு தினம்*

🖌தியாகிகள் தினம் (ஐக்கிய அரபு அமீரகம்)

🖌விடுதலை தினம் (பார்படோசு, ஐக்கிய ராஜ்ஜியத்திடம் இருந்து 1966)

🖌விடுதலை தினம் (தெற்கு ஏமன், ஐக்கிய ராஜ்ஐஇயத்திடம் இருந்து 1967)

🖌புனித அந்திரேயா விழா - கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபை)

➖➖➖➖➖➖➖➖➖➖

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .