👍Like Our📱Facebook🌍Page👉Click Here
👍Whats📱Trending🌍Today?👉Click Here
👍Health📱Tips🌍For You👉Click Here
பள்ளி மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு ( Aptitude Test) நடத்த குழுக்கள் அமைக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு ( குழுக்கள் அமைப்பு முறை மற்றும் அவற்றின் பணிகள் இணைப்பு )
மத்திய திட்ட ஏற்பளிப்புக்குழு கூட்ட நடவடிக்கை ஒப்புதலின்படி Quality Intervention என்ற தலைப்பின்கீழ் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு ( Aptitude Test at School Level) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இடைநிலை வகுப்பு பயிலும் மாணவர்களின் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு தங்களது ஆர்வம், பொது அறிவு மற்றும் எவ்வகைத் துறையில் நாட்டம் மேலோங்கி உள்ளது என்பதைக் கண்டறிந்து அத்துறையில் சிறந்து விளங்கும் கல்வி உளவியளாளர்கள் மூலம் அவர்களுக்கு வழிகாட்டுதலே இத்தேர்வின் நோக்கமாகும்.
இக்கல்வியாண்டில் EMIS உள்ள மாணவர்களின் விவரங்கள் அடிப்படையில் தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில வழியில் நடைபெறும் இத்தேர்வினை ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்படுத்திட மாவட்ட மற்றும் வட்டார அளவில் குழுக்கள் அமைத்தல் வேண்டும்.
No comments:
Post a Comment
உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .