மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பிரச்சினையை சரிசெய்வதற்கான கண்டுபிடிப்புகளை உருவாக்க மாணவர்களுக்கு சென்னை ஐஐடி அழைப்பு - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Friday, November 29, 2019

மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பிரச்சினையை சரிசெய்வதற்கான கண்டுபிடிப்புகளை உருவாக்க மாணவர்களுக்கு சென்னை ஐஐடி அழைப்பு

மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பிரச்சினையை சரிசெய்வதற்கான கண்டுபிடிப்புகளை உருவாக்க மாணவர்களுக்கு சென்னை ஐஐடி அழைப்பு 

மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பிரச்சினையை சரிசெய்வதற்கான கண்டுபிடிப்புகளை உருவாக்க மாணவர்களுக்கு சென்னை ஐஐடி அழைப்பு விடுத்துள்ளது. சென்னை ஐஐடியில் ஆண்டு தோறும் ‘சாஸ்திரா’ அறிவியல் திருவிழா நடத்தப்படுகிறது. இதில் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு போட்டிகள், கண்காட்சிகள் நடைபெறும். இதில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறு வனங்களில் இருந்து மாணவர்கள் பங்கேற்பர். அதன்படி 2020-ம் ஆண்டுக்கான ‘சாஸ்திரா’ திருவிழா ஜனவரி முதல் வாரம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் அனுபவிக்கும் பிரச்சினைகளை சரிசெய்வதற்கான கண்டுபிடிப்பு களுக்கு முக்கியத்தும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

 இதுதொடர்பான போட்டியில் பங்கேற்க விரும்பும் கல்லூரி மாணவர்கள் தங்களின் ஆராய்ச்சி திட்ட விவரங்களை விரிவாக எழுதி டிசம்பர் 7-ம் தேதிக்குள் atmakeathon@shaastra.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். கூடுதல் தகவல்களை atmakeathon.shaastra.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த போட்டியில் தேர்வாகும் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட உள்ளன. எனவே, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் ஆராய்ச்சி திட்டங்களை சமர்ப்பிக்கலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் outreach@shaastra.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி தெளிவு பெறலாம் என்று சென்னை ஐஐடி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment