இன்றைய திருக்குறள் 30/11/2019 - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Saturday, November 30, 2019

இன்றைய திருக்குறள் 30/11/2019

*_🌴🌴🌴பைந்தமிழ்🌴🌴🌴_*
          •┈┈•❀🐯🇮🇳🕊❀•┈┈•
                *_30.11.2019_*
            *_சனிக்கிழமை_*
             
              *_திருக்குறள் 310_* 

            *31. வெகுளாமை*                                            

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*குறள்: 310:-*

*_இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்_*
*_துறந்தார் துறந்தார் துணை._*

*பால் வகை:-* 1. அறம்
*இயல்:-* 3. துறவறவியல்
*அதிகாரம்:-* 31. வெகுளாமை

*சாலமன் பாப்பையா உரை:-*
பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே.

*மு. வரதராசனார் உரை:-*
சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.

*மு. கருணாநிதி உரை:-*
எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.

*மணக்குடவர் உரை:-*
சினத்தை மிகுந்தார் செத்தாரோடு ஒப்பர், அதனை யொழிந்தார் எல்லாப் பொருளையுந் துறந்தாரோடு ஒப்பர், இது வெகுளாதார் பெரியரென்றது.

*ஆங்கிலம்:-*
Men of surpassing wrath are like the men who've passed away; 
Who wrath renounce, equals of all-renouncing sages they.

*ஆங்கில உரை:-*
Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death).


•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

No comments:

Post a Comment

Please Comment