கல்வி செய்திகள் 30/11/2019 - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

கல்வி செய்திகள் 30/11/2019

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*


*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 கார்த்திகை 14 ♝ &   30•11•2019*
🔥
🛡 மூன்று இயக்குநர்கள் பணியிடமாற்றம் : ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் மதிப்புமிகு பழனிச்சாமி தொடக்கக் கல்வி இயக்குநராக நியமனம்.

🔥
🛡ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு சுயமதிப்பீடு மற்றும் புறமதிப்பீடு சார்ந்த அறிவுரை வழங்குதல் - சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡CTET  - மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு : தேர்வு டிசம்பர் 2019,  8 ஆம் தேதி நடைபெறும்.

🔥
🛡கோவை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று  ( 30.11.2019 ) சனிக்கிழமை பள்ளி வேலை நாள் அறிவிப்பு

🔥
🛡முதன்மைக்கல்வி அலுவலர் பணியிட மாற்றம் : கடலூர் CEO மாற்றம் செய்யப்பட்டு
அவருக்குப் பதிலாக திருமதி.ரோஸ் நிர்மலா நியமனம்.

🔥
🛡மாணவர் வருகைப் பதிவினை புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ள TN-EMIS App மூலமும், ஆசிரியர் & பணியாளர் வருகையை EMIS இணையதளம் மூலமும் மேற்கொள்ளவேண்டும் - வேலூர் CEO தெளிவுரை

🔥
🛡பள்ளிக் கல்வி - அரசு/நகராட்சி/ஆரம்ப/நடுநிலை/உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கழிவறைகள் பராமரித்தல்- சார்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு

🔥
🛡பின்லாந்து கல்விக் குழுவின் முதல்கட்ட சுற்றுப்பயணம் நிறைவு பள்ளிக் கல்வித் துறையிடம் ஆய்வறிக்கை நேற்று சமர்ப்பித்தனர்

🔥
🛡பள்ளி மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு ( Aptitude Test) நடத்த குழுக்கள் அமைக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு : பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு தங்களது ஆர்வம்,  பொது அறிவு மற்றும் எவ்வகைத் துறையில் நாட்டம் மேலோங்கி உள்ளது என்பதைக் கண்டறிந்து அத்துறையில் சிறந்து விளங்கும் கல்வி உளவியளாளர்கள் மூலம் அவர்களுக்கு வழிகாட்டுதலே இத்தேர்வின் நோக்கமாகும்.

🔥
🛡அரசு பள்ளிகளில், நிர்வாகம் மற்றும் தோட்ட பராமரிப்பு பணியாளர் காலியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வி இயக்குநரகத்துக்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளது.*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

No comments:

Post a Comment

Please Comment