டெபிட், கிரெடிட் அட்டைகளைப் பாதுகாக்க சூப்பர் டூப்பர் திட்டம் தயார்! - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

டெபிட், கிரெடிட் அட்டைகளைப் பாதுகாக்க சூப்பர் டூப்பர் திட்டம் தயார்!

டெபிட், கிரெடிட் அட்டைகளைப் பாதுகாக்க சூப்பர் டூப்பர் திட்டம் தயார்! இந்தியாவில் டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளின் பயன்பாடு அதிகமாகி வருகிறது. அதே அளவுக்கு கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளில் நடக்கும் மோசடிகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அது மட்டுமல்ல, மோசடிகளை செய்ய பல்வேறு புதிய யுக்திகளையும் மோசடிக்காரர்கள் கையாண்டு வருகிறார்கள். 

 மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணத்தை பாதுகாப்பது என்பதே இப்போது பாமரர்களின் மிகக் கஷ்டமான பணியாக மாறியுள்ளது. இதனை எளிதாக்க சில வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், அட்டை பாதுகாப்புத் திட்டம் (Card Protection Plan - CPP) என்ற ஒன்றை அறிமுகம் செய்துள்ளன. தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் இந்த திட்டத்தை பல்வேறு வகைகளில் செயல்படுத்துகிறார்கள். 


இந்த சேவையைப் பெற ஒரு வாடிக்கையாளர் ஆண்டுக் கட்டணமாக வங்கி அல்லது காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ.900 முதல் ரூ.2,100 வரை செலுத்த வேண்டியது இருக்கும். உங்கள் அட்டையை இந்த சிபிபி எனப்படும் பாதுகாப்புத் திட்டத்தில் சேர்ப்பதால் என்ன பயன் கிடைக்கும்? பிரத்யேக உதவி எண் சிபிபி எனப்படும் அட்டை பாதுகாப்புத் திட்டத்தில் இணைந்தவர்களுக்கு என்று பிரத்யேகமாக ஹெல்ப் லைன் உருவாக்கப்படும். ஒரு வேளை உங்கள் வங்கி அட்டை குறித்து புகார் அளிக்க வேண்டும் என்றால், ஒரே அழைப்பில் உங்கள் புகாரை பதிவு செய்துவிடலாம். 

அதாவது உங்கள் வங்கி அட்டை தொலைந்து விட்டால் அந்த வங்கியின் 24 மணி நேர சிபிபி உதவி எண்ணுக்கு அழைத்து புகார் அளித்தால் உடனடியாக அந்த அட்டை ரத்து செய்யப்படும். இந்த உதவி எண் 24 மணி நேரமும், உலகின் எந்த மூலையில் இருந்தும் தொடர்பு கொள்ளும் வகையில் இருக்கும். வெளியூர் சென்றிருக்கும் போது வங்கி அட்டை தொலைந்தால்? நீங்கள் வெளியூர் செல்லும் போது ஒருவேளை வங்கி அட்டை தொலைந்து விட்டால்.. நீங்கள் சிபிபி திட்டத்தில் இருந்தால், உங்களுக்கான செலவுகளை அந்த வங்கி அல்லது காப்பீட்டு நிறுவனம் செலுத்தும். 

நீங்கள் பத்திரமாக வீடு வந்து சேர வங்கியோ அல்லது காப்பீடு நிறுவனமோ பொறுப்பு. உங்களுக்காக டிக்கெட் எடுப்பது, உணவுக்கான பில்களைக் கொடுப்பது உள்ளிட்ட செலவுகளை வங்கி அல்லது காப்பீட்டு நிறுவனமே மேற்கொள்ளும். இந்த தொகைக்கு எந்த வட்டியும் கிடையாது. நீங்கள் திரும்பி வந்ததும், வங்கி அல்லது காப்பீட்டு நிறுவனம் கொடுக்கப்படும் கால அவகாசத்துக்குள் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் அவ்வளவுதான். பான் அட்டையைக் கூட பாதுகாக்கலாம் வங்கி அட்டை மட்டுமல்ல, உங்கள் பான் அட்டையையும் கூட இந்த திட்டத்தின் கீழ் பாதுகாக்கலாம். 

ஒரு வேளை பான் அட்டை தொலைந்துவிட்டால் எந்த கூடுதல் கட்டணமும் இன்றி வங்கியே பான் அட்டையை பெற்றுத் தரும். இதேப்போல, உங்கள் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், காப்பீட்டு ஆவணங்கள், சிம் கார்டுகளைக் கூட பாதுகாக்கலாம் இந்த சிபிபி திட்டத்தின் மூலம். பிறகு என்னங்க.. இனியும் வங்கி அட்டையைப் பாதுகாப்பது குறித்து ஏன் கவலைப்பட வேண்டும்..

No comments:

Post a Comment

Please Comment