சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள்! - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Wednesday, November 20, 2019

சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள்!

சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள்! * இதயம் காக்கும் சீதாப்பழங்களின் தோல்நீக்கி விதைகளை எடுத்துவிட்டு சதைப்பகுதியை அப்படியே அல்லது ஜூஸாக அருந்தி வர, இதய நோய்கள் யாவும் அணுகாது வாழலாம். 

 * நினைவாற்றலை அதிகரிக்கச்செய்யும். ஆரம்ப நிலை காசநோயை உடலிலிருந்து நீக்கும். மற்ற வகை காசநோய்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கது. 

 * ஊளைச்சதையை குறைத்து, உடல் மெலிதாகி வனப்புடன் திகழ, சீதாப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், விரும்பிய பலன்கள் கிட்டும். 

 * கோடைத்தாகம் நீக்கும். நாவறட்சி போக்கும். கோடைக்காலங்களில் ஏற்படும், அதீத தாகம், நாக்குவறட்சி இவற்றைப் போக்கி, உடலுக்கு குளிர்ச்சிதரும் தன்மைமிக்கது சீதாப்பழம். 

 * பெரிய ஆபரேசன்கள் ஆகி, அதிக வீரியம் கொண்ட மருந்துகள் உட்கொள்வதால் உடல் உள்உறுப்புகளில் ஏற்படும் புண்களை ஆற்றும். 

* மேலும், ஊறவைத்த வெந்தயத்துடன் சீதாப்பழத்தை சாப்பிட, குடற் புண்களையும் ஆற்றும். சீதாப்பழம் சாப்பிட்டு வர, மலச்சிக்கல் நீங்கும். 

 * சீதாப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துப்பொருட்களால், உடலின் இரத்தத்தை சுத்திகரித்து, இரத்தச்சோகை நோயை போக்கும், மேலும் உடல் சோர்வை போக்கி, உடலுக்கு புத்துணர்வு தரும். 

 * மன நோய் குணமாக சீதாப்பழத்தை இஞ்சிச்சாறு, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட, அல்லது தனியே சாப்பிட்டுவர, பித்தம் தெளிந்து, மனநோய் குணமாகும். 

 * உடல் வலுப்பெற, சீதாப்பழத்தை, திராட்சைப்பழச்சாறு கலந்து ஜூசாகக் குடித்துவரலாம்.

 * இரவில் சாப்பிட, நல்ல உறக்கம் வரும். சீதாப்பழத்துடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து பருகிவர, சிறுநீர் கடுப்பு நீங்கி, சிறுநீர் சீராக வெளியேறும்.

No comments:

Post a Comment

Please Comment