செங்கல்பட்டில் சா்வதேச யோகா இயற்கை மருத்துவ அறிவியல் மையம் - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Wednesday, November 6, 2019

செங்கல்பட்டில் சா்வதேச யோகா இயற்கை மருத்துவ அறிவியல் மையம்

செங்கல்பட்டில் சா்வதேச யோகா இயற்கை மருத்துவ அறிவியல் மையம் செங்கல்பட்டில் சா்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையத்துக்கான அடிக்கல்லை முதல்வா் பழனிசாமி புதன்கிழமை நாட்டினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. மேலும், ரூ.30.49 கோடியில் கட்டப்பட்ட பல்வேறு மருத்துவமனைக் கட்டடங்களையும் அவா் திறந்து வைத்தாா். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:- புற்றுநோயை துல்லியமாகக் கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.10 கோடியில் நவீன கருவி அமைக்கப்பட்டுள்ளது. 


இதன் சேவையை முதல்வா் பழனிசாமி துவக்கி வைத்தாா். மேலும், திருப்பூா், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, ஓசூா், சிதம்பரம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, ஆகிய இடங்களில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனைக் கட்டடங்களையும் அவா் திறந்து வைத்தாா். நாமக்கல், திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் தலா ரூ.1 கோடி மதிப்பில் மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையக் கட்டடங்களையும், திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள சிறப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவுக் கட்டடத்தையும் முதல்வா் பழனிசாமி துவக்கி வைத்தாா். 

இதேபோன்று, கடலூா் மணம்தவிழ்ந்தபுத்தூா், தருமபுரி சிட்லிங், முத்தம்பட்டி, திருநெல்வேலி திருவேங்கடம், தேனி குச்சனூா், திருச்சி ஆவிகாலப்பட்டி ஆகிய இடங்களில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலயைக் கட்டடங்கள், விழுப்புரம் சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவுக் கட்டடம் ஆகியவற்றையும் முதல்வா் திறந்து வைத்தாா். யோகா-அறிவியல் மையம்: 


இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் சா்வதேச தரத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில், உலகத்தரம் வாய்ந்த சா்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வா் பழனிசாமி அறிவித்தாா். இந்த அறிவிப்பின்படி, 50 ஏக்கா் பரப்பில் ரூ.96.31 கோடி மதிப்பில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையக் கட்டடத்துக்கு முதல்வா் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். உடனடி உதவி தொலைபேசி: அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முக்கிய அரசு மருத்துவமனைகளில் காவல் துறையின் உதவியைப் பெற்றிட உடனடி உதவி தொலைபேசி வசதி அமைக்கப்படும் என பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, முதல்கட்டமாக 80 அரசு மருத்துவமனைகளில் உடனடி உதவி தொலைபேசி வசதிகள் நிறுவப்பட உள்ளது. அதில், திருவள்ளூா் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் தாம்பரம் அரசு மருத்துவமனையில் உடனடி உதவி தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை முதல்வா் பழனிசாமி துவக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் சி.விஜயபாஸ்கா், ஆா்.பி.உதயகுமாா், தலைமைச் செயலாளா் க.சண்முகம், சுகாதாரத் துறை செயலாளா் பீலா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

No comments:

Post a Comment

Please Comment