நாளை தேசிய திறனாய்வு தேர்வு  - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Saturday, November 2, 2019

நாளை தேசிய திறனாய்வு தேர்வு 

நாளை தேசிய திறனாய்வு தேர்வு  பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பு முடிக்கும் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான தேசிய திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் மாநில அளவில் நவம்பர் 3-ம் தேதி நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு நாளை (நவ.3) நடைபெறுகிறது. 


இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 514 தேர்வு மையங்களில் 1,55,851 மாணவ, மாணவிகள் எழுதஉள்ளனர். காலை 9 முதல் 11 மணி வரை அறிவுத்திறன் தேர்வும், அதன்பின் 11.30 முதல் மதியம் 1.30 மணி வரை கல்வித்திறன் தேர்வும் நடைபெறும். மாணவர்கள் காலை 8 மணிக்குள் தேர்வு மையங்களில் இருக்க வேண்டும் என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. திறனாய்வு தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பு வரை மத்திய அரசு சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Please Comment