வரலாற்றில் இன்று 04/11/2019 - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Monday, November 4, 2019

வரலாற்றில் இன்று 04/11/2019

*🔵 நாடும் ⚖ நடப்பும்*

*🇪🇬வரலாற்றில் இன்று 🇪🇬*


              _*🌹திங்கள் 🌹*_

*✍ பதிவு நாள்: 04.11.2019*
*கிரிகோரியன் ஆண்டின் 307 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 308 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 58 நாட்கள் உள்ளன.*

*🔵நிகழ்வுகள்*

🖌1333 – ஆர்னோ ஆறு பெருக்கெடுத்து வெள்ளம் பரவியதில் இத்தாலியின் புளோரென்ஸ் நகரில் பெரும் சேதம் ஏற்பட்டது.

🖌1576 – ஸ்பானியப் படைகள் பெல்ஜியத்தின் ஆண்ட்வேர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரிதும் சேதப்படுத்தப்பட்டது.

🖌1861 – வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

🖌1869 – அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.

🖌1914 – பிரித்தானியாவும் பிரான்சும் துருக்கியுடன் போரை அறிவித்தன.

🖌1918 – முதலாம் உலகப் போர்: இத்தாலியிடம் ஆஸ்திரியா-ஹங்கேரி அரசு சரணடைந்தது.

🖌1918 – 40,000 கடற்படையினர் கீல் துறைமுகத்தைக் கைப்பற்றியதை அடுத்து ஜெர்மானியப் புரட்சி தொடங்கியது.

🖌1921 – ஜப்பானியப் பிரதமர் ஹரா தக்காஷி டோக்கியோவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

🖌1956 – அக்டோபர் 23 இல் ஆரம்பமான ஹங்கேரியப் புரட்சியை முறியடிக்க சோவியத் படைகள் ஹங்கேரியை முற்றுகையிட்டன. ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் கொல்லப்பட்டு லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.

🖌1966 – இத்தாலியின் புளோரென்ஸ் நகரத்தின் மூன்றில் இரண்டு பகுதி வெள்ளப் பெருக்கில் அழிந்தது. 113 பேர் கொல்லப்பட்டனர். பல பெறுமதியான ஓவியங்களும் நூல்களும் அழிந்தன.

🖌1967 – எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு: நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கில் நடிகர் எம். ஆர். ராதாவுக்கு ஏழு ஆண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

🖌1979 – ஈரானியத் தீவிரவாதிகள் டெஹ்ரானில் அமெரிக்கத் தூதராலயத்தை முற்றுகையிட்டு 53 அமெரிக்கர்கள் உட்பட 90 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்தனர்.

🖌1984 – நிக்கராகுவாவில் இடம்பெற்ற தேர்தல்களில் சண்டினீஸ்டா முன்னணி வெற்றி பெற்றது.

🖌1995 – இஸ்ரேலியப் பிரதமர் இட்சாக் ரபீன் தீவிரவாத வலதுசாரி இஸ்ரேலியரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

🖌2004 – ஐவரி கோஸ்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் 12 பிரெஞ்சுப் படையினர் மற்றும் 3 ஐநா கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

*🔵பிறப்புகள்*

🖌1618 – அவுரங்கசீப், முகலாயப் பேரரசர் (இ. 1707)

🖌1845 – வாசுதேவ் பல்வந்த் பட்கே, இந்தியப் புரட்சியாளர் (இ. 1883)

🖌1897 – ஜானகி அம்மாள், இந்திய தாவரவியலாளர் (இ. 1984)

🖌1951 – திரையன் பாசேசுக்கு, ரோமானிய அரசியல்வாதி

🖌1957 – டோனி அபோட், ஆத்திரேலிய அரசியல்வாதி, பிரதமர்

🖌1972 – தபூ, இந்திய நடிகை

*🔵இறப்புகள்*

🖌1988 – கி. வா. ஜகந்நாதன், தமிழ் இதழாளர், எழுத்தாளர் (பி. 1906)

🖌1988 – ஜேம்ஸ் இரத்தினம், ஈழத்து எழுத்தாளர். (பி. 1905)

🖌1995 – இட்சாக் ரபீன், இஸ்ரேல் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1922)

*🔵சிறப்பு தினம்*

🖌பனாமா – கொடி தினம்

🖌ரஷ்யா – மக்கள் ஒற்றுமை தினம்

➖➖➖➖➖➖➖➖➖➖

No comments:

Post a Comment

Please Comment