வரும் கல்வியாண்டு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே பாட புத்தகம் -பள்ளிக் கல்வித் துறை - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Thursday, November 7, 2019

வரும் கல்வியாண்டு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே பாட புத்தகம் -பள்ளிக் கல்வித் துறை

வரும் கல்வியாண்டு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே பாட புத்தகம் -பள்ளிக் கல்வித் துறை 


பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், "2011ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்று முதல் எட்டாம் வகுப்புக்கு 2012-13 கல்வி ஆண்டிலும், 9,10ஆம் வகுப்புகளுக்கு 2013-14ஆம் கல்வியாண்டிலும் செயல்படுத்திட அரசு உத்தரவிட்டது. ஆனால் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2019 -இன் படி, மாநில பாடத்திட்டத்தின் பின்பற்றிச் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 5, 8 ஆகிய வகுப்பு பயிலவிருக்கும் மாணவர்களுக்கு 2019- 20ஆம் கல்வி ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. 


 ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கு முப்பருவ முறை அறிமுகப்படுத்தப் பட்டதால், முப்பருவ முறையில் ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனியான பாடப்புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. நடப்பு கல்வியாண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடப்புத்தகம் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே பாடப் புத்தகமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-20 முதல் பொதுத் தேர்வு நடத்தப்படவுள்ளது. ஒவ்வொரு பாடத்திற்கும் மூன்று பருவங்களாக தனித்தனியாக வழங்கப்படும் பாடப்புத்தகத்தை ஒன்றாக இணைத்து, ஒரே புத்தகமாக வழங்கினால் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் தெரிவித்துள்ளார். 


அதனடிப்படையில் 2020-21ஆம் கல்வி ஆண்டிலிருந்து முப்பருவ முறையில் வழங்கப்பட்டு வரும் பாடப்புத்தகத்தை ஒன்றிணைத்து ஒரே புத்தகமாக வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது" என அதில் கூறியுள்ளார்.

School Education Department Secretary Pradeep Yadav issued by the governments, "2011, published edict, in Tamil Nadu's schools Trimester system was introduced. One of the first to the eighth class of the 2012-13 academic year, 9,10 the classes 2013-14 kalviyantilum implement government ordered. But for children free and compulsory Stone

 With the introduction of the Thirty Method for the 1st to 9th grades, students have been provided with a separate textbook for each season. The textbook has been consolidated into a single textbook for the ninth grade students from the current academic year.Currently, eighth graders will take the general exam from 2019-20. The State Academic Research and Training Institute said it would be beneficial for students to put together a textbook that will be presented separately for each of the three seasons.

Accordingly, the government has given permission to publish the textbook which will be issued in three years from the academic year 2020-21.

No comments:

Post a Comment

Please Comment