மாணவர்களிடையே உயர் சிந்தனை உருவாக்க 'இசைக்குழு' போட்டிகள் - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Monday, November 4, 2019

மாணவர்களிடையே உயர் சிந்தனை உருவாக்க 'இசைக்குழு' போட்டிகள்

மாணவர்களிடையே உயர் சிந்தனை உருவாக்க 'இசைக்குழு' போட்டிகள் 

மாணவர்களிடையே உயர் சிந்தனை, படைப்பாற்றல் போன்ற திறன்களை உருவாக்க, 'இசைக்குழு' போட்டிகள், தர்மபுரியில், 9ல் நடக்கிறது.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டம் சார்பில், திட்ட ஏற்பளிப்புக்குழு உத்தரவின்படி, இடைநிலை, மேல்நிலைப்பள்ளி கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இசைக்குழு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மாணவர்களிடையே, உயர் சிந்தனை, படைப்பாற்றல், பகுப்பாய்தல், பங்கு பெறுதல், குழு மனப்பான்மை போன்ற திறன்களை உருவாக்குவது மற்றும், 2020 குடியரசு தின விழாவை கொண்டாடுவது ஆகியவை நடப்பாண்டில், போட்டியின் நோக்கமாக உள்ளது. 

மாணவ, மாணவியருக்கு தனித்தனியாக நடத்தப்படும் இப்போட்டியில், 25 பேர் கொண்ட இசைக்குழு அணிகள் பங்கேற்கலாம். அதன்படி, தர்மபுரி மாவட்ட இசைக்குழு போட்டிகள் வரும், 9ம் தேதி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்க உள்ளது. இதில், பங்கேற்க விரும்புவோர், பள்ளி தலைமை ஆசிரியர் மூலம், சி.இ.ஓ., அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மாவட்டத்தில் வெற்றி பெறும் அணி, திருச்சியில் நவ.,15ல் நடக்கும், மாநில போட்டியில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Please Comment