‘பப்ஜி’ விளையாட்டை தடை செய்ய வேண்டும் - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Monday, November 11, 2019

‘பப்ஜி’ விளையாட்டை தடை செய்ய வேண்டும்

மது, போதை மருந்தைவிட ஆபத்தானது ‘பப்ஜி’ விளையாட்டை தடை செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்  


 மது, போதை மருந்தைவிட ஆபத்தானது ‘பப்ஜி’ விளையாட்டு. மாணவர்கள், இளைஞர்களை அடிமையாக்கும் இந்த விளை யாட்டை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: 


 தென்கொரியா நாட்டைச் சேர்ந்த ஃப்ளு ஹோல் நிறுவனத் தின் தயாரிப்பான ‘பப்ஜி’ விளை யாட்டு, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த 20 மாதங்களில் இந்தியாவின் தலைநகரம் முதல் குக்கிராமங்கள் வரை அனைத்து இடங்களிலும் இந்த விளையாட்டு பரவியிருக் கிறது. இந்த விளையாட்டின் அடிப்படையே மாணவர்களையும், இளைஞர்களையும் குரூரமான வெற்றி வீரர்களாக்கி, அடுத்தவர் களை அழித்தாவது வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற எதிர்மறை எண்ணத்தை ஏற்படுத்துவதுதான். 


 ‘பப்ஜி’ விளையாட்டின் தீய விளைவுகளுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன. பப்ஜிக்கு அடிமையான மாணவர் கள் பலர் படிப்பை மறந்து, பல மணி நேரம் இந்த விளையாட்டில் மூழ்கிக் கிடப்பதால் தேர்வுகளில் தோல்வியடையத் தொடங்கியுள்ள னர். ஏராளமான மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வெகுவாக குறைந்துவிட்டன. அலுவலகத்தில் பணிபுரியும் இளைஞர்களின் உற்பத்தித் திறன் குறைந்து, பலர் பணிநீக்கம் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது. குடும்பங்களில் இளம் தம்பதியினரிடையே மோதல் ஏற்படுவதற்கும் ‘பப்ஜி’ விளை யாட்டு காரணமாக இருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக இந்த விளையாட்டு இளைஞர்களிடையே ஏற்படுத்தும் உளவியல் மாற்றம் மிக மிக ஆபத்தானது, குரூரமானது. சில ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் பரபரப்பான இணைய விளையாட்டாக திகழ்ந் தது ‘புளுவேல்’. அதற்கு அடிமை யானவர்களை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது. ஆனால், ‘பப்ஜி’ விளையாட்டு அடுத்தவர் களை கொலை செய்யத் தூண்டு கிறது. இந்த விளையாட்டின் ஆபத்தை உணர்ந்த சீனா, நேபாளம், ஜோர்டான், ஈராக் உள்ளிட்ட நாடுகள் அதை தடை செய்துள்ளன. இந்தியாவிலும் சில கல்வி நிறுவனங் கள், சில மாணவர் விடுதிகளில் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் ‘பப்ஜி’ விளையாட்டை 53 கோடி பேர் விளையாடி வருகின்றனர். இந்தியா வில் மட்டும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி இருப்பவர்களின் எண்ணிக்கை 6 கோடிக்கும் அதிகமா கும். மது, போதை மருந்து ஆகிய வற்றைவிட ‘பப்ஜி’ விளையாட்டு மிகவும் ஆபத்தானது என்று கூறும் உளவியல் வல்லுநர்கள், இந்த விளையாட்டு உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.  ஏற்கெனவே டிக்-டாக் போன்ற இணைய செயலிகள் கலாச்சார சீர்கேட்டை விளைவிக்கின்றன. அதையே நம்மால் கட்டுப்படுத்த முடியாத நிலையில், பப்ஜி போன்ற விளையாட்டுகளும் கட்டுப்பாடற்று அனுமதிக்கப்பட்டால் அதன் மோசமான விளைவுகளை நம்மால் தாங்க முடியாது. எனவே, ‘பப்ஜி’ விளையாட்டை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். தேசிய அளவில் தடை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


Google Translation


Pubgi  is more dangerous than drugs Ramadas founder of P M K urged the Tamil Nadu government to ban this result of enslaving students and youth. In a statement he made yesterday:


The Southgate Flu Whole, a product of the pub, was launched in India in March last year. Over the next 20 months, the game will spread from the capital of India to hamlets. The essence of this game is to make students and young people cruelly victorious, and to create the negative impression that the next one will destroy the weeds and accumulate victories.


Signs of the evil effects of the publishing game have begun to appear. Many of the puppy-addicted students have forgotten their studies and have failed to take exams because they have been immersed in this game for several hours. Scores for students have dropped drastically. 


The productivity of young people working in the office has diminished and many have been laid off. Conflict among young couples in families is also the cause of publishing.On top of all this, the psychological change that this sport can cause among young people is very dangerous and brutal. Few years ago it was the hottest internet game worldwide. 


It prompted the slaves to commit suicide. But the pub's gaming game prompts the next to kill the weed. Countries including China, Nepal, Jordan and Iraq have banned the game.The game has been banned in some educational institutions and some student hostels in India. 53 billion people are playing the game of ppg around the world. In India alone, the number of people addicted to this sport is more than 6 million. Psychologists who claim that the pubg game is more dangerous than alcohol and drugs have recommended that the game be banned immediately.


Already, Internet processors such as Tick-Talk are causing cultural degradation. While we cannot control the same, we cannot bear the bad consequences if games like Pubgie are allowed unrestricted. Therefore, the Government of Tamil Nadu government has banned the game. To recommend to the federal government to ban the national. Ramadas said in the statement.

No comments:

Post a Comment

Please Comment